எவ்ளோ பெரிய ஆளா வேணா இருந்துட்டு போ! ஆனா மனுஷனா இரு.. அஜித்தை பங்கம் பண்ணிய இயக்குனர்

by Rohini |   ( Updated:2024-01-21 11:55:36  )
ajith
X

ajith

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் அஜர்பைஜானிலேயே நடத்தி முடிப்பதாக படக்குழு தெரிவித்த நிலையில் அஜித் கடந்த இரண்டு மாதமாக அஜர்பைஜானில்தான் தங்கியிருக்கிறார்.

அவ்வப்போதுதான் சென்னை வந்து குடும்பத்துடன் தன்னுடைய நேரத்தை செலவிட்டு மறுபடியும் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானுக்கே சென்று விடுகிறார். எப்படியாவது பிப்ரவரியில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட வேண்டும் என்ற நிலையில்தான் படக்குழு இருக்கிறது. அதனால் கொஞ்சமும் பிரேக் இல்லாமல் தொடர்ச்சியாக முழு மூச்சுடன் விடாமுயற்சி சூட்டிங்கை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க: விஜயகாந்த் நினைவிடத்தில் விஜய்க்கு வச்ச செக்! – தளபதிக்கு கேட்குற மாதிரி சொன்ன அம்பிகா

அதனால்தான் விஜயகாந்த் இறப்பிற்கு கூட அஜித்தால் வரமுடியவில்லை. இந்த நிலையில் பிரபல சினிமா இயக்குனரான பிரவீன் காந்தி அஜித்தை பற்றி அவருடைய கோவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அஜித்துடன் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் பயணித்திருக்கிறாராம் பிரவீன் காந்தி. உண்மையிலேயே அஜித் ஒரு பக்கா ஜெண்டில் மேன் என்று கூறிய பிரவீன் காந்தி,

என்ன தான் பிஸியாக இருந்தாலும் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வராத அஜித்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன் என்று கூறினார். எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமென்றால் இருங்கள். ஆனால் முதலில் நல்ல மனிதராக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதைதான் விஜயகாந்த் நமக்கு சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் என அஜித்தை கடுமையாக சாடியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஹீரோ மட்டும்தான் பழி வாங்கணுமா?.. நாங்களும் செய்வோம்!.. கதாநாயகிகள் இறங்கி நடித்த படங்கள்..

இப்படி அஜித்தை விமர்சித்ததால் அவருடைய ரசிகர்கள் என்னை திட்டத்தான் செய்வார்கள். ஆனால் பரவாயில்லை. அதைவிட ஒரு வேளை அஜித்துடன் இணைந்து படம் பண்ணும் வாய்ப்பு வராமல் கூட போகலாம். ஆனால் 20 வருடத்திற்கு முன்பே அஜித்தின் பட வாய்ப்பை நிராகரித்தவன் நான். அதனால் எனக்கு ஒன்றுமில்லை. இதற்காக உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது.

அதனால் அஜித் கண்டிப்பாக ஒரு நாள் விஜயகாந்தின் சமாதிக்கு வந்து விஜயகாந்தை சமாதானம் செய்யுங்கள். அதைவிட விஜயகாந்த் ரசிகர்களையும் சமாதானம் செய்யுங்கள் என்று அஜித்திடம் வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: வாயோடு வாய்.. எப்படியெல்லாம் ஊட்டி விடுறாரு? வீடியோவை வெளியிட்டு மஜா பண்ணும் நிக்கிகல்ரானி

Next Story