Categories: latest news

‘தங்கலான்’ படத்தை சத்தியமா பார்க்க மாட்டேன்! படமா எடுக்குறானுங்க? இவரே இப்படி சொல்லலாமா?

Thangalaan Movie: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் தங்கலான். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீஸாக இருக்கிறது. கே.ஜி.எஃபில் நடக்கும் ஒரு உண்மைக் கதையை மையமாக வைத்தே இந்தப் படம் தயாராகியிருக்கிறது. மேலும் தங்கலான் படத்தில் விக்ரம் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மாறுபட்ட கெட்டப்பில் நடித்திருக்கிறார்.

படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. சினிமாவில் ஏதாவது ஒரு வகையில் வித்தியாசமான முயற்சிகளோடு விக்ரம் ஒவ்வொரு படங்களிலும் தன் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இந்த தங்கலான் திரைப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய பேரை பெற்றுத்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க: விஜய் டெலிவிஷன் விருது விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகை யார் தெரியுமா? மற்ற விருதுகளின் விவரங்கள்!…

தங்கலான் திரைப்படத்திற்காக விக்ரம் ஆஸ்கார் விருதை கூட வெல்வார் என்று சொல்லிக் கொண்டே வருகிறார்கள். படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே வெளியாக வேண்டியது. ஆனால் சரியான நேரம் பார்த்து படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என இதுவரை காத்துக் கொண்டிருந்தார்கள். படத்தை பார்க்க அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தங்கலான் படத்தை சத்தியமாக பார்க்கவே மாட்டேன் என ஒரு இயக்குனர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் பா. ரஞ்சித் படம் என்றாலே பார்க்க மாட்டேன் என்ற முடிவோடுதான் ஆரம்பத்தில் இருந்து இருந்திருக்கிறார். இதில் தங்கலான் படமும் அடங்கும். ஒரே அழுக்காக நடிப்பதெல்லாம் பெரிய ஹீரோயிசமா என அந்த இயக்குனர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதையும் படிங்க: இப்ப என்ன பெரிசா பர்ஸ்ட்லுக், போஸ்டர்னு… அப்போ பாக்கியராஜ்கிட்ட இருந்த தில்லு யாருக்காவது இருக்கா?

அந்த காலத்தில் கர்ணன் திரைப்படத்தையே எந்தளவுக்கு அழகாக பிரம்மாதமாக எடுத்திருந்தார்கள். ஆனால் இந்தப் படம் முழுவதும் அழுக்காக இருக்கிறது. ஹீரோ என்றால் எப்படி இருக்க வேண்டும்? இந்த மாதிரி உடம்பு முழுக்க அழுக்கு பூசிக் கொண்டு இருந்தால் நன்றாகவா இருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

praveen

படமா எடுக்குறாங்க? ஒரே வன்முறையாகத்தான் இருக்கிறது. அதனால்தான் ராயன் திரைப்படத்தையும் நான் பார்க்கவில்லை. எனக்கு ரத்தம் என்றாலே ஒரு அலர்ஜி. இப்ப உள்ள தலைமுறைகளுக்கு என்ன மாதிரியான கருத்தை கொடுக்க வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. அதுவும் 16 லிருந்து 20 வயது உள்ளவர்கள் எதையும் சீக்கிரம் உள்வாங்கிக் கொள்ளும் வயதுடையவர்கள்.

இதையும் படிங்க: நீங்க இழுப்பீங்கனு தெரியும்… அதுக்குனு ஒரு காட்சிக்கு 26 நாளா? ஆடுகளம் படத்தில் நடந்த சம்பவம்!..

அவர்களிடம் இந்த மாதிரியான கத்தி, கொலை, கொள்ளை என படங்களின் மூலம் காட்டுவது சரியா? அதனால்தான் ராயன் மற்றும் தங்கலான் படங்களை பார்க்க மாட்டேன் என அந்த இயக்குனர் கூறியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. ரட்சகன் படத்தை எடுத்த பிரவீன் காந்திதான்.

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

5 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

6 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

7 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

8 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

14 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

15 hours ago