Connect with us
jailer

Cinema News

இதுக்கு பதில் அந்த மாறி படம் எடுத்து பொழைக்கலாம்- ப்ளூ சட்டை மாறனை பொளந்துகட்டிய இயக்குநர்

சமூக வலைதளங்களில் அடிக்கடி யாரையாவது வம்பிழுத்து சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டிருப்பர் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். இவர் யூடியூபில் சினிமா விமர்சனம் செய்து வருகிறார். அதிலும் கூட படம் எப்படி இருக்கு என்று கூறுவதோடு நிறுத்தாமல், நடிகர்களை பாடி ஷேமிங் செய்வது, தகாத வார்த்தகை பயன்படுத்துவது போன்றவற்றை செய்து வருகிறார்.

இவர் பெரும்பாலான படங்களுக்கு நெகடிவ் ரிவ்யூ தான் கொடுப்பார். அப்படி இருக்கையில் இவர் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்திற்கும் மோசமாக தான் ரிவ்யூ கொடுத்திருந்தார். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் திட்ட தொடங்கிவிட்டனர். கடந்த 10ம் தேதி அன்று ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் வெளியானது.

இதையும் படிங்க- ஜெயிலர் படத்தில் விஜய் சேதுபதியா?!.. நடிக்காமல் போனதற்கு காரணம் நெல்சனா!.. இது எப்ப?!..

இந்த படம் வெளியாவதற்கு முன்பிலிருந்தே, இந்த படம் குறித்த எந்த அறிவிப்பு வந்தாலும், ப்ளூ சட்டை மாறம் சமூக வலைதளங்களில் கேலி செய்துகொண்டிருந்தார். படம் வெளியான பிறகு படத்திற்கு நெகடிவ் ரிவ்யூ கொடுத்திருந்தார். இந்நிலையில் இது குறித்து இயக்குநர் பிரவீன் காந்தி, சமீபத்திய பேட்டி ஒன்றில், இது போல விமர்சனம் செய்து சம்பாதிப்பதற்கு பதிலாக, ப்ளூ பிளிம் எடுத்து ப்ளூ சட்டை மாறன் பிழைத்துக் கொள்ளலாம்.

அவர் அதற்கு மட்டும் தான் லாய்க்கு. இவரின் ரிவ்யூவால் ரஜினி படத்தை ஒன்றுமே செய்ய முடியாது. இவர் படம் நல்லா இல்லை என்று கூறினால், படம் தோல்வி அடைந்துவிடும் என்று இவர் நினைத்தால், அது முட்டாள் தனம். ரஜினிக்கு முன்பு இவர் ஒரு ஆளே இல்லை. மக்களுக்கு படம் பிடித்திருக்கிறது.

படம் நன்றாக இருக்கிறது. எனவே இந்த படம் வெற்றி பெரும். ரஜினி ப்ளூ சட்டை மாறனையெல்லாம் ஒரு ஆளாகவே மதிக்கவில்லை. அதனால் தான் அவர் செய்வதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்று இயக்குநர் பிரவீன் காந்தி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- இனிமே கிட்ட வாங்கடா!.. ஜெட் வேகத்தில் ரஜினி!.. லோகேஷ் படத்துக்கு கால்ஷீட் ரெடி..

google news
Continue Reading

More in Cinema News

To Top