பணம் இல்லாத போதும் வாரி வாரி கொடுத்த வள்ளல் தான் எம்ஜிஆர்... இது எப்போ நடந்தது?

by sankaran v |   ( Updated:2024-06-15 10:47:20  )
MGR
X

MGR

இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றி ஒருமுறை பேட்டி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் மாதிரி திரையுலகில் இன்று நல்லா உதவி செய்றது எனக்குத் தெரிஞ்சி யாரும் கிடையாது. சும்மா யாரையாவது சொல்லணும்னு சொல்லலாம். ஆனா எம்ஜிஆரைப் பொருத்தவரை அவர் உதவி செய்யணும்கறதுக்காக செஞ்சது கிடையாது. அவரோட குணமே அதுதான். 50 ரூபா சம்பளம்.

இதையும் படிங்க... நான் வெறும் குதிரை!.. எனக்கு மரியாதையே இல்ல!.. ரசிகர்களிடம் அன்றே சொன்ன ரஜினி!…

எம்ஜிஆர் கத்தி, வாள் சண்டை, சிலம்பம் எல்லாம் நல்லா பண்ணுவாரு. அவரை வந்து ஒரு படத்துல வில்லனா நடிக்கக் கூட்டிட்டுப் போறாங்க. அவங்க அண்ணன் தான் கூட்டிட்டுப் போறாரு. அங்கே போய் வெறும் 50 ரூபான்னு சம்பளம் பேசியாச்சு. 5 நாள் சூட்டிங். அந்த 50 ரூபால வெறும் 25 ரூபாவைக் கொடுத்து அனுப்பிச்சிட்டாங்க.

நைட் அண்ணன்காரன் அம்மா கிட்ட கேட்குறாரு. 'தம்பிக்கு சினிமாவுல அட்வான்ஸ் வாங்கிக் கொடுத்தேன். பணம் கொண்டு வந்து கொடுத்தானா?'ன்னு கேட்குறாரு. 'எவ்வளவு கொடுத்தான்?' 'பத்து ரூபா..' கொடுத்தான். 'இல்லையே 25 ரூபா நான் தானே அட்வான்ஸ் வாங்கிக் கொடுத்தேன்..'னு சொல்றாரு. 'வந்தா கேளு..'ன்னும் சொல்லிடுறாரு.

நைட் சாப்பிட வரும்போது எம்ஜிஆர் கிட்ட அவங்க அம்மா கேட்குறாங்க. அதுக்கு எம்ஜிஆர் சொன்ன பதில் இதுதான். கும்பகோணம் பஸ்ஸ்டாண்டுல நான் வந்து இறங்குனேன். அங்க ஒரு குடும்பமே நின்னுக்கிட்டு இருந்தது. பஞ்சம் பொழைக்க வந்துருந்தாங்க.

R.Sundarrajan

R.Sundarrajan

அப்பா, அம்மா, 2 வயசுக்கு வந்த பொண்ணுங்க, ஒரு பையன் வந்துருந்தாங்க. வேலை கிடைக்கல. பஸ்ஸ்டாண்டுல படுத்து இருந்தாங்க. அப்படின்னதும் அவங்களுக்கு 15 ரூபாவைக் கொடுத்தேன். மீதி 10 ரூபாவைக் கொண்டு வந்து உங்கக்கிட்ட கொடுத்தேன்னு சொன்னாரு.

அப்போ அந்த அம்மா அவங்க அண்ணனைக் கூப்பிட்டு சொன்னாங்களாம். 'எந்த கும்பகோணம் பஸ்ஸ்டாண்டுல நீயும், உன் தம்பியும் பசியோட நின்னோமோ, அதே பஸ்ஸ்டாண்டுல ஒரு குடும்பத்தையேக் காப்பாத்திட்டு வந்துருக்கான் உன் தம்பி...'ன்னு சொல்லிருக்காங்க.

இதை எதுக்காகச் சொல்றேன்னா பணம் இருந்த போது மட்டும் எம்ஜிஆர் வாரி வாரிக் கொடுக்கல. இல்லாத போதும் அந்த 25 ரூபாயிலயும் கொடுக்கணும்கற மனசு அவருக்கு அப்பவே இருந்துருக்கு. கொடுக்கற அந்த மனம் அவருக்கு சின்ன வயசுல இருந்தே இருந்துருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story