சொல்றத மட்டும் செய்! வாய கொடுத்து மாட்டிக்கிட்ட அஜித்.. கோபத்தில் கத்திய இயக்குனர்
Actor Ajith: தமிழ் சினிமாவில் இப்போது ஒரு மாஸ் ஹீரோவாக இருந்து வருபவர் நடிகர் அஜித். ஒரு ஆக்சன் ஹீரோவாக தன்னுடைய வளர்ச்சியை இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறார் அஜித். அவருக்கு இருக்கும் கிரேஸ் இங்கு கோலிவுட்டில் வேறு யாருக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒரு உயரத்தில் இருக்கிறார் அஜித்.
ஆனால் அவருடைய ஆரம்ப கால படங்களை பார்த்தால் குடும்பப்பாங்கான படங்கள் மற்றும் ஒரு யதார்த்தமான கதைகளுடன் கூடிய படங்கள் இவற்றில் தான் நடித்திருப்பார். இதிலிருந்து அவருடைய வளர்ச்சியை நம்மால் பார்க்க முடிகிறது. அஜித்தும் சரி விஜய்யும் சரி ஆரம்ப காலங்களில் சென்டிமென்ட்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த படங்களில் தான் நடித்து வந்தார்கள்.
ஆனால் இப்பொழுது ஒரு முழு ஆக்சன் ஹீரோக்களாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் அஜித் நடித்த ஒரு சென்டிமென்ட் கலந்த படம் அதுவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்றால் அது நீ வருவாய் என . ராஜ்குமாரன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் முதலில் அஜித் விஜய் இருவரும் தான் நடிக்க இருந்தது.
இதையும் படிங்க:சனிக்கிழமை சரிவா?.. சக்சஸா?.. கல்கி 2898 ஏடி 3 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா பங்கு?..
பார்த்திபன் கேரக்டரில் விஜய்யும் இப்போது அஜித் நடித்த கேரக்டரில் அஜித்தும்தான் நடிக்க இருந்தது. ஆனால் அஜித்தின் கதாபாத்திரம் விஜய்க்கு மிகவும் பிடித்து போனதால் நான் அந்த கதாபாத்திரததில் நடிக்க விரும்புகிறேன். அஜித்தை ஹீரோவாக நடிக்க சொல்லுங்கள் எனக் கூறினாராம். ஆனால் அஜித்துக்கு இந்த ரோல் பிடித்துப் போனதால் அவர் முடியாது என்ன சொல்ல விஜய்யும் இந்த ரோல் எனக்கு வேண்டாம் என விலகி விட்டாராம் .
அதன் பிறகு தான் பார்த்திபன் உள்ளே வந்திருக்கிறார். 10 நாட்கள் கால்சீட் வீதத்தில்தான் அஜித் இந்த படத்தில் நடித்து கொடுத்தாராம். அதாவது ஒரு கெஸ்ட் ரோலில் தான் நடித்திருப்பார் அஜித். அந்த படப்பிடிப்பு சமயத்தில் ஒரு காட்சியில் தேவயானியும் அஜித்தும் பேசுவது மாதிரி படமாக்கி இருப்பார்கள். அதாவது இந்த மூக்குத்தி பிடிச்சிருக்கா? இந்த கம்பல் புடிச்சிருக்கா என தேவயானி கேட்க அதற்கு அஜித் பதில் சொல்லிக் கொண்டே இருப்பார்.
இதையும் படிங்க: ரஜினிலாம் பெரிய மேட்டரே இல்ல! வேட்டையனோடு மல்லுக்கு நிற்க தயாரான ‘கங்குவா’.. என்ன காரணம் தெரியுமா?
இந்த காட்சி எடுக்கும் போது ராஜகுமாரன் ஒன் மோர் ஒன் மோர் என கேட்டுக்கொண்டே இருந்தாராம். அதற்கு அஜீத் இந்த ஒரு காட்சியை எத்தனை முறை தான் எடுப்பீர்கள் என கேட்க அதற்கு ராஜகுமாரன் இங்கு நான் தான் இயக்குனர் நான் சொல்றத மட்டும் கேளுங்க என சொன்னாராம் .அந்த அளவுக்கு இயக்குனர் என்ற அடிப்படையில் சரியாக இருப்பாராம் ராஜகுமாரன் .
அது மட்டும் அல்லாமல் அடிப்படையில் ராஜகுமாரன் ஒரு ஹியூமரான நபரும் கூட. இதன் காரணமாகவே அஜித் பத்து நாள் கால்சீட்டை 12 நாளாக மாற்றிக் கொண்டாராம். ஏனெனில் அந்த அளவுக்கு ராஜகுமாரனை அஜித்துக்கு பிடித்து போனதுதான் காரணம். இந்த சுவாரசிய தகவலை நடிகர் பாவா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க: கெடைச்ச வாய்ப்புல கோல் போட்டு அசத்திய வாலி… அண்ணாவிடம் இருந்து வந்த திருத்தம்..!