Connect with us

அவர் ஒரு முழுநேர குடிகாரர்… பிரபல நடிகர் குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குனர்….!

director rajakumaran

Cinema News

அவர் ஒரு முழுநேர குடிகாரர்… பிரபல நடிகர் குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குனர்….!

நடிகர்கள் யாரும் படங்களில் பார்ப்பது போல் நிஜ வாழ்க்கையில் இருப்பதில்லை. சிலர் படத்தில் பார்க்கும் கேரக்டருக்கு அப்படியே எதிர்மறையாக இருப்பார்கள். இந்த நடிகரா இப்படி என நாம் அதிர்ச்சி அடையும் அளவிற்கு அவர்களது நிஜ வாழ்க்கை கேரக்டர் இருக்கும்.

தற்போது அப்படி ஒரு செய்தியை தான் நாம் பார்க்க போகிறோம். ஆம் தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என ஒரு பன்முக கலைஞராக திகழ்ந்த நடிகர் மணிவண்ணன் குறித்து பல விஷயங்களை இயக்குனர் ராஜகுமாரன் பகிர்ந்துள்ளார்.

manivannan

அதன்படி சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “மணிவண்ணன் சார் கதையே தயார் செய்யாமல் ஸ்பாட்டுக்கு சென்று அருமையான சீன் ரெடி செய்து விடுவார். ஸ்பாட்லையே எல்லாத்தையும் தயார் செய்யும் ஒரு திறமையான இயக்குனர் என்றால் அது மணிவண்ணன் தான்.

அதுமட்டுமல்ல ஒரே சமயத்தில் இரண்டு மூன்று படங்களை இயக்கும் அளவிற்கு திறமை வாய்ந்தவரும் கூட. சூர்யவம்சம் படத்தில் தான் முதன் முறையாக மணிவண்ணன் சாரை சந்தித்தேன். எனக்கு மணிவண்ணன் என்றாலே படங்களில் அவர் குடிக்கும் சீன் தான் நியாபகம் வரும்.

devayani

ஏனென்றால் மணிவண்ணன் சார் மிகப்பெரிய குடிக்காரர். எல்லா நேரத்திலேயும் அவர் குடித்து கொண்டே தான் இருப்பாராம். ஷூட்டிங் இருந்தாலும் இல்லை என்றாலும் குடிப்பது தான் அவரின் வழக்கமாம். அது என்ன கலாச்சாரம்னு தெரியல. அந்த பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்தால் அவர் இன்னும் நம்மோடு இருந்திருப்பார்” என கூறியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top