Connect with us
banner

கதை தான் எனது கதாநாயகன் ஹீரோக்கள் அல்ல என்று சொல்லி அடித்த இயக்குனர் இவர் தான்…!

Cinema History

கதை தான் எனது கதாநாயகன் ஹீரோக்கள் அல்ல என்று சொல்லி அடித்த இயக்குனர் இவர் தான்…!

ராஜமௌலி கடந்து வந்த பாதை

சினிமா என்றாலே பொழுதுபோக்குகளைக் கடந்து பல நல்ல கருத்துகளை ஊட்ட வேண்டும் என்பது தான் பல இளம் இயக்குனர்களின் எண்ணமாக உள்ளது. ஒரு படத்தின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது நடிகரா அல்லது இயக்குனரா என்றால் இயக்குனர் தான் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

ஹீரோக்களுக்காக கதை எழுதும் இயக்குனர்களும் இருப்பார்கள். ஆனால் கதையின் நாயகனே என் கதை என ஒட்டுமொத்த உழைப்பையும் கதைக்காகக் கொட்டி இந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்த இயக்குனர் தான் ராஜமௌலி.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, தயாரிப்பு என சகலகலாவல்லவர்களாகத் திகழும் இயக்குனர்கள் மத்தியில் கதை, திரைக்கதை ஏன் வசனம் கூட எழுத தெரியாத இயக்குனர் என்ற பெயருக்கும் இவர் தான் சொந்தக்காரர். ஆனாலும் இவர் இயக்கிய 12 படங்களும் மெகாஹிட். சினிமாவால் இவருக்குப் பெருமை என்பதை விட இந்தியசினிமாவிற்கே இவரால் பெருமை என்று சொல்லலாம்.

rrr

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் அவர்களின் பாராட்டுமழையில் நனைந்தவர் இந்;த இயக்குனர் ராஜமௌலி. அக்டோபர் 10, 1973ல் கர்நாடகாவில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தில் மாண்டிக்கு அருகில் உள்ள அமரீஷ்வரா முகாமில் விஜயேந்திரபிரசாத், ராஜாநந்தினி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

ஸ்ரீசைலா ஸ்ரீராஜமௌலி என்பது இவரது இயற்பெயர். இவரது தந்தை விஜயேந்திரபிரசாத் சிறந்த திரைக்கதை எழுத்தாளர். ஆந்திர மாநிலம் குவ்வூரில் பள்ளிப்படிப்பையும், ஏழூரில் பொறியியல் படிப்பையும் முடித்தார். தாயார் விசாகப்பட்டினத்தில் இருந்ததால் ராஜமௌலியும் அங்கேயே வசித்து வந்தார்.

ராஜமொலியின் குருவாக இருந்தவர் ராகவேந்திரராவ். இவரின் வழிகாட்டுதலால் ஈநாடு என்ற டிவியில் தொடர்களை இயக்கினார். தொடர்ந்து ஆவணப்படம், விளம்பரப்படம், தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிய ராஜமௌலிக்கு ஊக்க சக்தியாய் இருந்து வெள்ளித்திரைக்கு கொண்டு வந்த பெருமை அவரது குருவையேச் சாரும்.

முதன்முதலில் தனது தந்தையிடமே திரைக்கதை உதவியாளராக இருந்தார். ஆரம்பத்தில் ஸ்டூடன்ட் நம்பர் ஒன் என்ற படத்தின் வெற்றியே ராஜமௌலிக்கு பிள்ளையார் சுழி. இந்தப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி. இந்தப்படத்தில் பிரித்விராஜ் கதை, வசனம் எழுத, திரைக்கதை எழுதி தயாரித்தார் ராகவேந்திரராவ்.

இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஜூனியர் என்டிஆர். 2001ல் வெளியான இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சிம்ஹாத்ரி படம் தான் ராஜமௌலிக்கு திருப்புமுனையாக அமைந்தது. வசூல் வேட்டையில் ஆந்திராவையே அலறவிட்டது. இந்தப்படம் தான் தமிழகத்தில் விஜயகாந்த் நடிப்பில் கஜேந்திராவாக உருவானது. ஆனால் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

nan e

தந்தை இயக்கத்தில் உருவான ராஜண்ணா திரைப்படத்தில் சண்டைக்காட்சிகளை மட்டும் அமைத்தார். 2005ல் பிரபாஸ் உடன் சத்ரபதி படத்தில் இணைந்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று பிரபாஸ_க்கு பெரும் வரவேற்பைக் கொடுத்தது. இந்தப்படம் தான் தமிழில் விஜய் நடிப்பில் குருவியாக வந்தது.

ஆனாலும் இந்தப்படம் பெரும் வெற்றி பெறவில்லை. 2006ல் விக்ரமகுடு, 2007ல் ஜூனியர் என்டிஆருடன் எமதும்ஹா ஆகிய படங்களை இயக்கினார். மகதீரா, பாகுபலி ஆகிய மாபெரும் படங்கள் உருவாகக் காரணம் இந்த எமதும்ஹா தான். இந்தப்படத்தின் கரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அதிசயபிறவி படம் தான். ராஜமௌலி என்றால் பிரம்மாண்டம், அனிமேஷன் படம் என்ற முத்திரை குத்தப்பட்டது. மகதீரா சரித்திர படமாக உருவாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தப்படத்தின் வெற்றிக்கு ராம்சரண் நடிப்பு தான் காரணம் என்றனர். ஆனால், கதைதான் காரணம் என்பதை உணர்ந்த ராஜமௌலி இதையே சவாலாகக் கொண்டு அடுத்த திட்டம் தீட்டினார். அதன்படி மகதீரா படத்தில் நடித்த காமெடி நடிகர் சுனிலைக் கொண்டு மரியாதை ராமண்ணா என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெறச் செய்தார். இந்தப்படம் தான் தமிழில் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற பெயரில் சந்தானம் நடிப்பில் உருவானது.

தமிழில் மாவீரன் என்ற பெயரில் மகதீரா மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. தொடர்ந்து நேரடி தமிழ்ப்படமாக எடுக்க முடிவு செய்தார் ராஜமௌலி. அப்படி உருவானது தான் நான் ஈ. கதாநாயகன் எனக்கு முக்கியமல்ல.

bahupali

ஈ கூட ஹீரோ தான் என நிரூபித்தார் ராஜமௌலி. இவரது திரையுலகப் பயணத்தில் ஒரு மைல் கல் எது என்றால் பாகுபலி தான். இந்தப்படத்திற்குப் பிறகு ராஜமௌலியை அனைவரும் யார் யார் என தேடத் தொடங்கினார். கதாநாயகர்களை விட கேரக்டர் தான் பெரிய அளவில் பெயர் வாங்கியது.

பாகுபலி கட்டப்பா என்ற பெயர் ட்ரெண்டானது. அடுத்த பாகமும் பெரும் வெற்றி பெற்றது. தற்போது ஆர்ஆர்ஆர் என்ற படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் தெறிக்க விடுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top