தனுஷ் செய்த காரியத்தால் பிரபல இயக்குனருக்கு வந்த சிக்கல்… இதெல்லாம் சினிமாவுல சகஜமப்பா!!
“முண்டாசுப்பட்டி”, “ராட்சசன்” போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் ராம் குமார். இவர் தற்போது மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கவுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் செய்த காரியத்தால் ராம்குமாருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
தனுஷ் தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தையும் சத்யஜோதி தியாகராஜன்தான் தயாரித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பதாக இருந்ததாம்.
மேலும் அந்த திரைப்படத்தை ராம் குமார் இயக்குவதாக இருந்ததாம். தனுஷ் இந்திய சினிமாவின் டாப் நடிகராக வலம் வருவதால் அவரது மார்க்கெட்டுக்கு ஏற்றார் போல் இயக்குனர் ராம் குமாருக்கு 2 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாம்.
இதையும் படிங்க: “இந்த கதை வேண்டாம், அந்த கதைதான் வேணும்”… டான் பட இயக்குனரின் தலையில் குண்டை தூக்கிப்போட்ட ரஜினிகாந்த்… பாவத்த!!
ஆனால் இத்திரைப்படத்தில் இருந்து தனுஷ் விலகிவிட்டாராம். அதன் பிறகுதான் தற்போது இதில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளாராம். தனுஷ் இத்திரைப்படத்தில் இருந்து விலகியதால் இயக்குனர் ராம் குமாருக்கு பேசப்பட்டிருந்த இரண்டு கோடி ரூபாய் சம்பளம் குறைக்கப்பட்டுவிட்டதாம். தனக்கு சம்பளம் குறைக்கப்பட்டதை பெருந்தன்மையான மனதோடு ராம் குமார் ஏற்றுக்கொண்டாராம்.