More
Categories: Cinema History Cinema News latest news

ராமராஜனுக்குள் இவ்ளோ திறமையா? இந்தப்படங்கள் எல்லாம் இவருடையதா? ஆச்சரியம் தான்…!

ராமராஜனை தமிழ்சினிமா உலகில் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாத திறமையான ஒரு நடிகர். 1980களில் கலக்கியவர் இவர் தான். இவரது கரகாட்டக்காரனை யாராவது மறக்க முடியுமா? நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் இருந்து இவருக்கு என்று தமிழ்சினிமா ரசிகர்களிடையே தனி மவுசு உருவானது.

இவர் படங்களில் எவ்வித ஆபாசமான காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இடம்பெறாது என்பதால் தாய்க்குலங்கள் இவரது படத்தைக் காண ஆவலுடன் திரையரங்கிற்கு வருவர். மென்மையான கதாநாயகர்கள் பட்டியலில் ராமராஜன் முதன்மையான இடத்தைப் பிடித்தவர். இவர் நடித்த படங்கள் தான் நமக்குத் தெரியும்.

Advertising
Advertising

ஆனால், இவருக்குள் இத்தனை திறமையா? படங்கள் எல்லாம் கூட இயக்கியுள்ளாரா என்று கேட்பவர்களுக்கு ஆச்சரியங்கள் விரியும். இவர் இயக்கிய படங்கள் பற்றி நிறைய பேருக்குத் தெரியாது. அவர் என்னென்ன சூப்பர்ஹிட் படங்களை இயக்கியுள்ளார் என்று பார்க்கலாமா…

மண்ணுக்கேத்த பொண்ணு

mannukketha ponnu

1985ல் வெளியான இப்படத்தை இயக்கியவர் ராமராஜன். பாண்டியன், இளவரசி, கவுண்டமணி, ஜனகராஜ், வினுசக்கரவர்த்தி, காந்திமதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

கங்கை அமரன் இசை அமைத்துள்ளார். பூங்காற்றே அந்த பொண்ணே, ஆனந்தம் இன்று, வெத்தலை மடிச்சு, அல்லி பூக்களே, என்ன பத்தி கேட்டு ஆகிய பாடல்கள் உள்ளன.

மருதாணி

1985ல் வெளியான இப்படத்தை ராமராஜன் இயக்கினார். பாண்டியன், ஷோபனா, கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். கங்கை அமரன் இசை அமைத்துள்ளார்.

மருதாணியா இவ மகராணியா, மச்சானுக்கு மச்சம் இருக்கு, தொட்டில் கிளி தூங்கடி, வெளக்கு வச்ச படிச்சிடத்தான் ஆகிய பாடல்கள் உள்ளன.

அம்மன்கோயில் வாசலிலே

1996ல் வெளியான இந்தப்படத்தை நடித்து இயக்கியவர் ராமராஜன். இவருடன் சங்கீதா ஜோடி சேர்ந்துள்ளார். மணிவண்ணன், செந்தில், காந்திமதி, குள்ளமணி, சந்தானபாரதி, ஆர்.சுந்தரராஜன், ராஜஸ்ரீ உள்பட பலர் நடித்துள்ளனர்.

சிற்பி இசை அமைத்துள்ளார். அம்மன் கோவில், என்ன விலை அது, இள மனசு, பொன்னூஞ்சல் ஆடுது, உன் மாலையப்போ, வந்தாள் புகுந்த ஆகிய பாடல்கள் உள்ளன.

நம்ம ஊரு ராசா

1996ல் வெளியான படத்தில் ராமராஜன், சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வடிவேலு, சார்லி, பொன்னம்பலம், ஆர்.பி.விஸ்வம், சண்முகசுந்தரம், பொன்வண்ணன், காந்திமதி, சத்யபிரியா, அல்வா வாசு உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்திற்கு தாய்க்குலங்கள் அமோக ஆதரவு கொடுத்தனர். சிற்பியின் இசையில் சின்ன மணி, அண்டன்காக்கா, என்னுடைய மாடப்புறா, ஒரு ஜான், அம்மா அம்மா மாரியம்மா, காடு வெட்டி, தன்மான ஆகிய இனிமையான பாடல்கள் உள்ளன.

கோபுரதீபம்

gopura deepam

1997ல் வெளியான படம். ராமராஜன், சுகன்யா, ஆர்.சுந்தரராஜன், செந்தில், பாண்டு, மதன் பாப், பாலு ஆனந்த், கோவை சரளா, அல்வா வாசு, குள்ளமணி உள்பட பலர் நடித்துள்ளனர்.

சௌந்தர்யன் இசை அமைத்துள்ளார். மாமா ஏய், என்னுடைய பொண்டாட்டி, என் வாழ்க்கை மன்னவனே, உள்ளமே உனக்குத்தான், கங்கை காயும், சாஞ்சா ஆகிய இனிய பாடல்கள் உள்ளன.

மேற்கண்ட படங்கள் தவிர, சோலை புஷ்பங்கள், ஒன்று எங்கள் ஜாதியே, ஹலோ யார் பேசறது? மறக்க மாட்டேன்,  சீறி வரும் காளை, விவசாயி மகன் ஆகிய படங்களையும் ராமராஜன் தான் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
sankaran v

Recent Posts