More
Categories: Cinema News latest news

அயலான் பட்ஜெட்டே பிச்சிகிட்டு போகுது… இதுல இந்த ஆசைலாம் அவசியம்தானா பாஸ்…

Ayalaan Movie: சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். ஆரம்பத்தில் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். கலக்க போவது யாரு, ஜோடி நம்பர்1 போன்ற பல நிகழ்ச்சிகளில் இவர் தொகுப்பாளராக இருந்துள்ளார். பின் தனது விடாமுயற்சியினால் வெள்ளித்திரையில் வலம் வர ஆரம்பித்தார். மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

பின் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், எங்க வீட்டு பிள்ளை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இவரது படங்களில் இவரே பாடல்களையும் பாடியுள்ளார். ஹீரோ, வேலைக்காரன் என தொடர் தோல்விகளை சந்த்தித்த சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் திரைப்படம் வெற்றியை தேடி தந்தது.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:அங்கயும் மிரட்டுனாங்க! பிரச்சினை வராத நாளே இல்ல போல – லியோ படத்தில் பட்ட வேதனையை பகிர்ந்த இயக்குனர்

இவர் தற்போது இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராகுல்பிரித் சிங் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஷரத் கல்கர், இஷா கோபிகர் போன்ற பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் சமீபத்தில் வெளியாகியது. இப்படத்தில் ரவிக்குமார் ஏலியன் போன்ற கதாபாத்திரத்தை பயன்படுத்தியுள்ளார். இது சிவகார்த்திகேயனின் ரசிகர்களிடையே கடும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் வாசிங்க:பேசாதீங்க அண்ணாச்சி… அப்புறம் ஃபீல் பண்ணுவீங்க… லியோ டிரெய்லரை பங்கமாய் கலாய்த்த இமான் அண்ணாச்சி…

இப்படத்திற்கு ஏற்கனவே பட்ஜெட் அவர்கள் நியமித்ததைவிட அதிகமாகிவிட்டதாம். மேலும் இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை பயன்படுத்தியதாக சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார். ஏற்கனவே பட்ஜெட் எகிறிய நிலையில் தற்போது படக்குழு இப்படத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி இப்படத்தில் வரும் ஏலியன் காட்சிகளுக்கு 3D தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனராம்.

மேலும் இப்படத்தில் பறக்கும் தட்டுகள், ஏலியன் போன்ற பல காட்சிகள் இடம்பெற்றிருப்பதாலும் மேலும் பொங்கலுக்கு இன்னமும் நிறையவே நேரம் இருப்பதாலும் படத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என படக்குழு முடிவெடுத்துள்ளது. எனவே இது இப்படத்தினை எதிர்பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஆர்வத்தை அதிகப்படுத்தும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

இதையும் வாசிங்க:கமலுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டி தூக்கிய ரஜினிகாந்த்… படமும் மாஸ் ஹிட்டாம்..!

Published by
amutha raja

Recent Posts