50 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நடிகர்களே இவரை ‘தலைவர்’ என அழைக்கிறார்கள். தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பின் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக ரஜினி மாறினார். ரஜினியின் திரைப்படங்கள் வசூலில் சக்கை போடு போட்டு தியேட்டர் அதிபர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அதிகளவு லாபத்தை கொடுத்தன.
தற்போது 74 வயதாகியும் ஆக்டிவாக ஹீரோவாக நடித்து வருகிறார் ரஜினி.. தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் அடுத்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ‘மன சங்கர வர பிரசாத் காரு’ என்கிற தெலுங்கு படத்தின் இயக்குனர் ரவிப்புடி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ரஜினிகாந்த் ஸ்லோமோஷன் நடந்த வர சீன் இல்லாமல் ஒரு படம் எடுத்தால் நம்மால் பார்க்க முடியுமா? பிஜிஎம்(பின்னணி இசை) இல்லாமல் போனால் ரஜினிகாந்த் சினிமா என்னவாகும்? நம்மால் அந்த படத்தை பார்க்க முடியுமா?.. அதுதான் அவருடைய பலம்.. அப்படி இருந்தாதான் அது ரஜினிகாந்த் படம்.. அவர் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் பண்ணா ஆடியன்ஸ் ஏத்துக்க மாட்டாங்க’ என பேசியிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா ‘ ஸ்லோமோஷன் சீன் இல்லனா ரஜினியே இல்லை’ என்று விமர்சித்திருந்தார். தற்போது அதே கருத்தை ரவிப்புடி வேறு மாதிரி சொல்லியிருக்கிறார். இதையடுத்து ‘இவரு ரஜினிய பாராட்டுறாரா? இல்ல கலாய்க்கிறாரா?’ என ரசிகர்கள் நக்கலடித்து வருகிறார்கள்.




