‘வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே’ பாடல் உருவானது இப்படித்தான் – இயக்குனர் சொல்றத கேளுங்க!..

Published on: January 19, 2024
---Advertisement---

மறைந்த கேப்டன் விஜயகாந்தை எக்காலத்திலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. அவர் நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதராக எல்லோரது மனதிலும் ஆழப்பதிந்து விட்டார். இதுதான் இதற்குக் காரணம். அந்த நடிகரின் மனதை அப்படியே படம் பிடித்துக் காட்டிய பாடல் தான் இது. அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவரே… என்று தொடங்கும் இந்தப் பாடல் சின்னக்கவுண்டர் படத்தில் வருகிறது.

ஆர்.வி.உதயகுமாரின் இயக்கத்தில் இளையராஜாவின் இசை அமைப்பில் உருவான பாடல். இந்தப் படத்தில் விஜயகாந்த் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி இருந்தார். வழக்கமான அதிரடி சண்டைக்காட்சிகள் இல்லாமல் அமைதியான குடும்பப்பாங்கான கிராமிய மணம் கமழும் படம். இந்தப் படத்தில் சுகன்யா விஜயகாந்தின் ஜோடியாக அற்புதமாக நடித்து இருந்தார்.

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டரையும் செதுக்கி இருந்தார். ஊருக்கே பஞ்சாயத்து பண்ணும் பெரிய மனிதர் சின்னக்கவுண்டராக வழித்து பின்னோக்கி சீவிய தலைமுடியுடன் விஜயகாந்த் கம்பீரமாக வருவார். அவரது அம்மா மனோரமா. ஒரு தடவை அவரது உயிரைக் காப்பாற்றி விடுகிறார் சுகன்யா.

இதையும் படிங்க… சின்னக் கவுண்டர் படத்தில் விஜயகாந்த் நடித்தது இப்படித்தான்!.. சுவாரஸ்யம் சொன்ன ஆர்.வி.உதயகுமார்…

அப்போது விஜயகாந்த் ஒரு தட்டில் வெத்தலைப்பாக்கு, பழங்களுடன் சேலையுடன் பத்தாயிரம் ரூபாயையும் வைத்து சுகன்யாவிடம் கொடுப்பார். அப்போது அவர் கேட்பார். ‘ஐயா நீங்க இந்த ஊருக்கே பஞ்சாயத்து பண்ணுற பெரியவரு. உங்க ஆத்தாவோட உசுருக்கு 10 ஆயிரம் ரூபா தானா. இது என்ன மரியாதை?’ன்னு கேட்ட உடனே விஜயகாந்துக்கு செருப்பால அடிச்ச மாதிரி ஆயிடும். அப்புறம் அவரே சொல்வார். ‘இந்த 10 ஆயிரம் ரூபாயை நான் உங்களுக்கேத் தர்றேன். என் ஆத்தாவோட உசுர தர முடியுமா?’ன்னு கேட்பார். அந்த கேள்வியில் உடைந்து போகும் கேப்டன் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்கிறார்.

அப்போது தான் சொல்லால் அடித்த சுந்தரி பாடல்ல நாலைந்து வரிகளை போட்டேன். அப்போது கூட தன்மானத்தோட காசுக்காக பலியாகும் கேரக்டர் அவள் அல்ல. அவள் வீட்டுக்கு மொய்விருந்து வைத்து அதன் மூலமா வரும் காசை சேர்த்து கடனை அடைக்கணும். அந்த விருந்துக்குக் கூட விஜயகாந்தை தன்மானம் கருதி அழைக்க மாட்டார் சுகன்யா. அப்போது மனோரமா, என்ன கௌரவத்தையே விட்டுக்கொடுக்காம போறா பார்த்தியாடான்னு கேப்டனிடம் சொல்வார்.

அந்த மாதிரி உயர்ந்த நெகடிவிட்டி கதாபாத்திரம் அது. அவர் அழைக்காமலும் அங்கு செல்லும் கேப்டன் அவரது வீட்டில் சாப்பிட்டு விட்டு இலைக்கு அடியில் மொய் வைப்பதற்குப் பதில் தாலியை வைத்து விடுகிறார். தன் ஆத்தாவோட உயிரைக் காப்பாற்றியவளை விட உலகத்தில் உயர்ந்தவள் இருக்க முடியாது என்பது தான் அதன் அர்த்தம்.

MM
MM

அவளுக்காகப் பணம் கொடுத்துக் கேவலப்படுத்தி விட்டோமே… தாலியையேக் கொடுத்து விடுவோம் என்று தான் இப்படி வைக்கிறார் கேப்டன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தென்னை ஓலைகளுக்கு இடையே உள்ள ஓட்டையில் அவளுடைய கஷ்டத்தைக் கைகழுவுற மாதிரி ஒரு சீன். அதை கம்போசிங்கில் இளையராஜாவிடம் சொல்லவும் கேட்டுவிட்டுப் போய்விடுகிறார்.

விஜயகாந்தின் மனசு அந்த வானத்தைப் போல உயர்ந்து நிற்கிறது. இதை விட பெரிய மனசு உள்ளவன் யாரும் கிடையாது. அந்த வானத்தைப் போல… அப்படியே போட்டுட்டாரு இளையராஜா. அந்த வானத்தைப் போல மனம் படைச்ச தந்தனனா… அதுக்கு அப்புறம் பனித்துளியைப் போல குணம் படைச்ச தென்னவனேன்னு நாம போட்டோம். முதல் வார்த்தையையே டியூனாகப் போட்டு அசத்தினார் இளையராஜா. இப்போது அவரது இறுதி அஞ்சலியின்போதும் அனைத்து மீடியாக்களும் இந்தப் பாடலை ஒலிபரப்பத் தவறவில்லை.

மேற்கண்ட தகவலை சின்னக்கவுண்டர் படத்தின் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.