சின்னக் கவுண்டர் படத்தில் விஜயகாந்த் நடித்தது இப்படித்தான்!.. சுவாரஸ்யம் சொன்ன ஆர்.வி.உதயகுமார்...

by sankaran v |
CKV UK
X

CKV UK

சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்து வெற்றிக்கொடி நாட்டியவர் ஆர்.வி.உதயகுமார். விஜயகாந்த் பற்றி உதயகுமார் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு பெரிய ஓப்பனிங் கொடுத்தவர் கேப்டன். ஆபாவாணன் ஊமைவிழிகள் படத்தை எடுத்தபோது அவருக்கு அடுத்த செட் நான். ஊமைவிழிகள் படத்தை 3 செட்டா பிரிஞ்சி, 7 நாளில் நாங்க படம் எடுக்கப் போறோம்னு சொன்னோம். எங்களோட ஆர்வத்தைப் பார்த்துட்டு, கதை எல்லாம் கேட்டுட்டு நான் 70 நாள் கால்ஷீட் தரேன்.

CK

CK

பொறுமையா எடுங்க. நீ அதே சம்பளத்தைக் கொடுன்னு சொன்னாரு. எந்த நடிகர் இப்படி சொல்வாரு? ஊமைவிழிகள், உழவன் மகன் படங்களில் டிஸ்கஷன் ஒர்க் பண்ணிருக்கேன். மதுரைல உழவன் மகன் டிஸ்கஷன். இவரு சாதாரணமா சட்டை, லுங்கி போட்டு நம்மக் கூடவே இருப்பாரு. சாப்பாடு எல்லாம் வாங்கி தந்து பிரிச்சிக் கொடுப்பாரு. நம்ம கூடவே தங்கிடுவாரு. அவரை ஹீரோவா நம்ம வாழ்க்கைலயே பார்த்ததில்ல. அவரோட எளிமை எல்லோரது மனதையும் கவர்ந்து இழுத்து விடும்.

இதையும் படிங்க... கேப்டனை பிடிக்காதவங்கன்னு யாராவது இருந்தா அது இவங்கதான்! தலைவாசல் விஜய் சொன்ன ரகசியம்..

கிழக்குவாசல் வெற்றிக்குப் பிறகு ஒரு படம் பண்ணலாம்னு ராவுத்தர் சார் கேட்டாரு. வில்லேஜ் படம் பண்ணுவோம்னு சொன்னாரு. கதை சொல்றேன். முழுசா சொல்ல மாட்டேன். இதுதான் மேட்டர்னு சொன்னேன். ஒருத்தர் இடுப்புல துண்டைக் கட்டுனா கோவிலுக்குப் போறான். தோள்ல துண்டை போட்டா பஞ்சாயத்துக்குப் போறான். அப்படி தூக்கி வெச்சா அடிச்சி பட்டையைக் கிளப்புவான். இதுதான் கேரக்டர். அவன் நடந்து போனா ஊரே தலைவணங்கி நிற்கும்.

அப்பேர்ப்பட்ட ஆளு ஊர் ஜனங்க முன்ன தலைகுனிஞ்சி போறான். இதுக்கு என்ன காரணம்? இதுக்கு மேல கதை கேட்காதீங்கன்னுட்டேன். ஓகேன்னுட்டாரு. விஜயகாந்துக்காக தன்னை முழுமையா அர்ப்பணிச்சவரு தான் ராவுத்தர். அவரு விஜயகாந்துக்கிட்ட சொல்லி நடிக்க வச்சாரு.

பரதன் படம் கோவைல நைட் சூட்டிங். காலை 5 மணிக்கு நேரா பொள்ளாச்சி வந்துடுவாரு. எல்லாரையும் எழுப்பி சூட்டிங்குக்கு நேரமாச்சுன்னு சொல்வாரு. இந்த மாதிரி பாசமா வேறு எந்த நடிகரும் இருக்க முடியாது.

Next Story