
Cinema News
படத்தை எடுத்தவன ஓடவிட்டு அடிக்கனும்…இயக்குனரை தகாத வார்த்தைகளால் பேசிய வடிவேலு…
மிருகம், உயிர், சிந்து சமவெளி படத்தை இயக்கியவர் இயக்குனர் சாமி. இவர் இயக்குனராக முதன் முதலில் அடியெடுத்து வைக்கும் போது ஏகப்பட்ட கஷ்டங்களை பார்த்ததாக தெரிவித்தார். இவர் தற்போது ”அக்கா குருவி” என்ற குழந்தைகளுக்கான படத்தை இயக்கியுள்ளார். சிந்து சமவெளி படத்தை இயக்கிய பின் என் மார்க்கெட்டே ஒரு பத்து வருடமாக கிடப்பில் போடப்பட்டது.
ஏனெனில் அந்த படத்தின் கதை அப்படி. மொத்தமா க்ளோஸ் ஆயிட்டேன். அதன் பிறகு வேறு எதாவது படம் பண்ணலாம் என்று எண்ணி நிறைய கதைகளை எழுதினேன். அப்படி எழுதிய கதைகளில் உயிர் படத்தின் கதை பிடித்து போனது தயாரிப்பாளர்களுக்கு.ஆனாலும் அதிலும் ஏதாவது ஒரு சிறிய மாற்றத்தைக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என கூறினார்கள்.
இதையும் படிங்கள் : ஐய்யோ எத பாக்குறதுன்னே தெரியலயே!…இளசுகளை தவிக்க விட்ட தமன்னா…
பின் என்னுடைய அசிஸ்டெண்ட் “சார் இந்த படத்தில் அண்ணி கேரக்டரை நெகட்டிவ் ரோலா மாத்திரலாம்” என்று கூறினார். அதன்படி முதலில் அது பாஸிட்டிவ்வான கதாபாத்திரமாகத் தான் இருந்தது. பிறகு தான் நெகட்டிவாக மாற்றி படத்தை எடுத்தோம்.
அதோடு முடியல, வடிவேலு சார் ஒரு படத்தின் ஆடியோ லாஞ்சில் உயிர் படத்தை பற்றி கேவலமாக பேசினார். “அது ஒரு படமா? படத்தை எடுத்தவன ஓடவிட்டு கல்லால அடிக்கனும்” என்று கூறினார். அவர் பேசிய வீடியோ ரொம்ப வைரலானது. ஆனால் படம் ஹிட் ஆனது.2.50 கோடியில் எடுத்த படம் 4.50 கோடி வரை வசூல் செய்தது. இந்தப் படத்தில் சங்கீதா அண்ணியாகவும் ஸ்ரீகாந்த் ஹீரோவாகவும் நடித்திருப்பார்.