விஜய் கதை கேட்கும் ஸ்டைலே வேற!.. எஸ்.ஏ.சி சொன்ன மாஸ் தகவல்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வசூல் சக்கரவர்த்தியாக சமீபகாலமாக மாறி வருகிறார் விஜய். படம் வெளிவருவதற்கு முன்னாடியே இவரை நம்பி ஏராளமான கோடிகளை போட்டு வரிசை கட்டிக் கொண்டு நிற்கின்றனர். வியாபாரமும் படு பயங்கரமாகவே போய்க் கொண்டிருக்கிறது விஜய் படங்களுக்கு. யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அசுர வளர்ச்சியை எட்டி வருகிறார் விஜய்.
ஒரு முழு ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்ததில் இருந்து இவரின் மார்கெட் எகிறத் தொடங்கியது. ஆரம்பகாலங்களில் ஒரு லவ்வபிள் பாயாகவே இருந்து ரசிகர்களை எண்டர்டெயின்மெண்ட் பண்ணிக் கொண்டிருந்த விஜய் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வடிவமைத்துக் கொண்டு சினிமாவிற்கு ஏற்றப்படி தன்னை செதுக்கி ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார்.
ஆனால் இதற்கெல்லாம் ஒரு பில்லர் போல நின்றவர் அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சி தான். இது விஜய் சொல்கிறாரோ இல்லையோ ஆரம்பகாலங்களில் இருந்து விஜயின் வளர்ச்சியை கண்கூடாக பார்த்த பல பேர் விஜய்க்கு ஒரு தூணாக இருந்தவர் அவரின் தந்தை தான் என்று சொல்ல கேட்டிருக்கிறோம்.
ஒரு பேட்டியில் எஸ்.ஏ.சி விஜய் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற காரணமானது எது? எப்படி தன்னை தகவமைத்துக் கொண்டார் என்று கூறியிருக்கிறார். முதலில் விளையாட்டுத்தனமான பிள்ளையாக இருந்த விஜயை ஒரு ஃபேமிளிக்குள்ள கொண்டு போக வேண்டும் என்று நினைத்து விக்ரமனிடம் ஒப்படைத்தேன். அவரை அழகாக பயன்படுத்திக் கொண்டு ஒரு நடிகனாக பூவே உனக்காக திரைப்படத்தில் வெளிப்படுத்தினார்.
அதன் பின் ஆக்ஷன் ஹீரோவாக மாற்ற வெங்கடேஷிடம் ஒப்படைத்தேன். அதில் முதன் முதலில் ஆக்ஷன் ஹீரோவாக மாறியதே பகவதி படத்தில் தான். இப்படி ஒரு படிப்படியான பரிணாமத்தை தான் ஒரு இயக்குனராக இருந்ததனால் தான் தர முடிந்தது. அதை அப்படியே பயன்படுத்திக் கொண்டு இன்று எங்கேயோ போய்விட்டார் என்று மெய்சிலிர்த்துக் கொண்டார்.
மேலும் அவர் கூறும் போது முன்னெல்லாம் விஜய்க்காக நான் தான் கதை கேட்பேன். அந்தக் கதையில் ஏதேனும் திருத்தம் இருந்தால் சொல்லி திருத்திக் கொண்டு அதன் பின் தான் விஜயிடம் போகும். நான் சொன்னாலே அது முடிவாகிவிடும். கொஞ்ச நாள்களுக்கு பிறகு இருவரும் சேர்ந்து கதை கேட்க ஆரம்பித்தோம். இப்பொழுது விஜய் தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார் என்று கூறி,
இதையும் படிங்க : மீண்டும் வண்டி பழைய ஸ்டேஷன்ல தான் நிக்கும் போல!.. கோடிகளை நம்பி வாய்ப்புகளை தவறவிடும் சிம்பு!..
அவர் கேட்கும் ஸ்டைலே வேற, கதை கேட்கும் போது டேபிளுக்கு அடியில் அவர் தொடையில் ஒரு லெட்டர் பேடும் வைத்துக் கொள்வார். கதை சொல்லும் போது அதை கேட்டுக் கொண்டே கீழே ஏதாவது சந்தேகம் இருந்தால் அதை அப்படியே எழுதிக் கொண்டு கதை முடிந்த பிறகு கடைசியாக அந்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வார் என்று விஜயின் வளர்ச்சியை அந்த அளவுக்கு பிரமிப்பாக கூறியிருந்தார் எஸ்.ஏ.சி.