More
Categories: Cinema History Cinema News latest news

எங்க ரெண்டு பேரையும் இருட்டுல இருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த படம் இதுதான்… இயக்குனர் எஸ்ஏசி

சட்டம் ஒரு இருட்டறை விஜயகாந்தின் திரையுல வாழ்க்கையில் ஒரு மைல் கல். அந்தப் படத்தின் அனுபவங்கள் குறித்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…

நான் வாஹினி ஸ்டூடியோவுல விஜயகாந்த் மோட்டார் சைக்கிள்ல போறதைப் பார்த்தேன். நான் அங்கே வேற ஒருத்தரோட நின்னு பேசிக்கிட்டு இருந்தாரு. அப்போ என்னையும் அறியாத ஒரு எண்ணம்… அவரோட பவர்புல்லான கண்ணைப் பார்த்த உடனே எனக்குத் தேவையான ஹீரோ இவருதான்னு நினைச்சேன்.

Advertising
Advertising

அப்போ அந்த புரொடக்ஷன் மேனேஜரை விட்டு இவரைப் பத்தி விசாரிச்சேன். அவரு சொன்னாரு. இவர் தூரத்து இடி முழக்கம் என்ற படத்துல நடிச்சிக்கிட்டு இருக்காருன்னு சொன்னாங்க. உடனே அவரை வரவழைத்து நேருக்கு நேரா பார்க்கும்போது முழுமையான ஒரு திருப்தி வந்தது.

அவரோட கண்கள் தான் எனக்குப் பிடிச்சிருந்தது. அவரோட உடற்கட்டும் நான் நினைச்ச மாதிரியே இருந்தது. உடனே அவரை பிக்ஸ் பண்ணினோம். அவரு ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோவா வருவாரு. ஏன்னா அது ஒரு அழுத்தமான கதை.

இதையும் படிங்க… விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த வராத வடிவேலு… இதுதான் காரணமாம்… முத்துக்காளை சொல்லும் புதுத்தகவல்

அதுக்கு ஏத்த மாதிரி அவரும் ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சாரு. அந்தப் படம் சிறந்த வெற்றியைக் கொடுத்துச்சு. அந்த வெற்றி அவருக்கு மட்டுமல்ல. எனக்கும் கிடைச்சது. சட்டம் ஒரு இருட்டறை என்ற அந்த இருட்டறையில் இருந்து நாங்க ரெண்டு பேரும் வெளிப்பட்டுட்டோம்.

மேற்கண்ட தகவலை படத்தின் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

1981ல் வெளியான விஜயகாந்தின் சூப்பர்ஹிட் ஆக்ஷன் படம் சட்டம் ஒரு இருட்டறை. பூர்ணிமா, சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இது இரண்டாவது படம். சட்ட அமைப்பைப் பற்றிய படம் என்பதால் அனைத்துத் தரப்பினராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. சட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எழச் செய்தது. இந்தப் படத்தில் விஜயகாந்துக்கு வாய்ஸ் கொடுத்தவர் எஸ்.என்.சுரேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க... பணத்துக்காக மார்கெட் லெவலையும் குறைத்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ்! அம்மணிக்கு என்ன கஷ்டமோ?

இவர் தான் மோகனின் வெள்ளி விழா படங்களுக்குக் குரல் கொடுத்தவர். இந்தப் படத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்தனராம். ஆனால் தயாரிப்பாளர் எஸ்.சிதம்பரம் ரொம்பவே உறுதியாக இருந்தாராம். இந்தப் படத்திற்குப் பிறகு விஜயகாந்துக்கு ஆக்ஷன் படவாய்ப்புகள் ஏராளமாக வந்தன.

Published by
sankaran v

Recent Posts