கதையைக் கேட்ட சேரன் கொடுத்த பில்டப்...! அப்செட்டான சமுத்திரக்கனி...!! இப்படி எல்லாமா நடந்துச்சு...?!
நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி ஒருமுறை தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தனது ஆரம்பகால படங்களின் இயக்கத்தைப் பற்றியும் அதன் அனுபவங்கள் குறித்தும் இவ்வாறு சொல்கிறார்.
ஆடியன்ஸ் நம்ம விட புத்திசாலி. நமக்குத் தெரியாத விஷயங்கள் கூட அவங்களுக்குத் தெரியும்கற பயத்தோட நாம இயக்கணும்.
எஸ்.பி.பி.சரண் தயாரிப்புல வெளியான படத்துக்கு உன்னைச் சரணடைந்தேன் கதை எழுதி இயக்கினேன். வெங்கட்பிரபு, எஸ்.பி.பி.சரண் இவங்களை எல்லாம் அதுல நடிக்க வைச்சேன்.
அப்போ எஸ்.பி.பி. ஏன்டா இவங்களை வச்சி எல்லாம் படம் எடுக்குற. சம்பாதிக்க முடியுமாடான்னு கேட்டார். படத்தில பாதி கதையை நான் சொன்னதுமே சரண் இதைப் புரொசீடு பண்ணுங்க. நான் முழுப்படத்தைத் தியேட்டர்ல பார்க்குறேன்.
ஆனா இந்தப் படத்துக்கு மியூசிக் நான் தான் பண்ணுவேன்னாரு. படம் முடிஞ்சி பிரிவியு ஓடிக்கிட்டிருந்தது. அப்போ ஒரு சவுண்டு கேட்டுது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வா... ன்னு கூப்பிட்டாரு. ஒரு லட்சம் ரூபாய் செக் எழுதி தந்து அடுத்து நமக்கு பண்ணுன்னு சொன்னாரு.
அப்போ தான் ஆட்டோகிராப் ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆகறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி பேச ஆரம்பிக்கிறோம். பஞ்சு அருணாசலம் சொன்னாங்க. நல்ல கதை இருந்தா சேரனை வச்சிப் பண்றியான்னு கேட்டாரு. சொன்ன உடனே ஒரு கதை பண்ணுனேன். சேரன்ட போய் சொன்னேன். சரி. பண்றேன்.
ஆட்டோகிராப் ரிலீஸ் அன்னைக்கு குவாட்டர் பேஜ்ல ஒரு ஆட் வந்தது. கணேசா பஞ்சு அருணாசலம் வழங்கும், இளையராஜா இசைன்னு போட்டு விளம்பரம் வந்தது. அங்க ஆட்டோகிராப் அடிச்சுத் தூக்குது.
திடீர்னு என்ன நெனைச்சாருன்னு தெரில... நான் உண்மையைத் தான் சொல்றேன். தைரியமா சொல்வேன். என்னைக் கூப்பிட்டாரு சேரன்.. சேரன் சார் வந்து இப்போ இவ்ளோ பெரிய சக்சஸ்டா... இந்தக் கதை பத்துமாடா.... நீ தாங்குவியாடான்னு கேட்டாரு.
நான் அப்படியே வெளியே வந்துட்டேன். எனக்கு அந்த வார்த்தை ரொம்ப டிஸ்டர்பன்ஸ்சா இருந்தது. வெளியே வந்ததும் ஞானவேல் ராஜா சார்ட்ட போய் சார் நாம ஆரம்பிப்போம். அப்போ சேரன்... இல்ல அவருக்கு என் மேல நம்பிக்கை இல்ல. அதனால வந்து இதை ஆரம்பிப்போம்.
அப்போ நாடோடிகள் கதை சொல்றோம். அப்போ வில்லேஜ் கேரக்டர்னா நடிக்க மாட்டேன்னு ஒரு ஹீரோ சொல்லிட்டாரு. என்னடா அப்படின்னு ஒட்கார்ந்துருந்தோம். அப்போ ஞானவேல் ராஜா சார் வந்தாரு.
கேப்டன் கிட்ட கதை சொல்லி ஓகே. வாங்கியாச்சு. நீ டைரக்ட் பண்றீயான்னு கேட்டாரு. படம் எல்லாமே நல்லா வந்துச்சு. அப்போ அவரு பணத்தைத் திருப்பி கேட்டா அது எங்கிட்ட இல்ல. ஓகே பண்ணிருவோம்னு பண்ணிட்டேன். படம் டைரக்ட் பண்ணியாச்சு. நல்லா வந்தது.
அது என்னன்னு தெரில. அதுதான் நெறஞ்ச மனசு. அதுக்கு அப்புறமா அவர் பாலிடிக்ஸ் போனதா என்னன்னு தெரில.. படம் நினைச்ச மாதிரி போகல. உடனே ரொம்ப டிஸ்டர்பன்ஸ் ஆயிட்டேன். ஒரு வெற்றி வந்துட்டா எல்லாரும் ஷேர் பண்ணிக்கிடுவாங்க.
தோல்வி வந்துட்டா டைரக்டர் தலைல தூக்கி வச்சிக்கிட்டு அவன் தான்... அவன் தான்..னு சொல்வாங்க. ஒருவேளை நாம தான் தப்பு பண்ணிட்டோமோன்னு நினைச்சி அதைத் திருத்திக்கலாம்னு இருந்தேன்.
அப்போ அமீர் சார் தேனில பருத்திவீரன் எடுத்துக்கிட்டு இருக்காரு. நான் அங்கே போனதும் வாங்கன்னு கேட்டாரு. உடனே நான் பாட்டுக்கு அங்க போய் ஒர்க் பண்ண ஆரம்பிச்சிட்டேன். நாலு நாள் கழிச்சி என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்டாரு. ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு சொன்னேன். படம் முடிஞ்சுது.
நன்றி இயக்குனர் சமுத்திரக்கனின்னு போட்டாரு. இல்ல. நான் ஏதோ தப்பு பண்ணிட்டேன். திரும்ப முதல்ல இருந்து வார்ரேன். இணை இயக்குனர்னு போடுங்கன்னு சொன்னேன். உடனே திரும்ப இணை இயக்குனர்னு போட்டாரு. அதற்குப் பிறகு தான் சுப்பிரமணியபுரம் நடிச்சோம். நாடோடிகள திரும்ப முதல் படமா நினைச்சி எடுத்தோம்.