அந்த பாட்டை வச்சித்தான் ஃபாரினுக்கே போனேன்...ஷங்கர் சொன்ன ரகசியம் பாருங்க.....
பிரம்மாண்டத்திற்கு பெருமை சேர்த்தவர் இயக்குனர் சங்கர். இவரின் படைப்புகள் சொல்வதற்கு எளிதல்ல. இயக்கும் ஒவ்வொரு படங்களுக்கு ஒரு புதமையான தொழில்நுட்பத்தை புகுத்த விரும்புவர். புதுமையை புகுத்தி படைப்புகளை வெளிக்கொண்டு வருபவர்.
இவரின் கெரியரில் வந்த படங்களான காதலன், ஜெண்டில்மேன், முதல்வன், எந்திரன், நண்பன் போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும். பெரும்பாலும் இவரின் படங்களுக்கு பக்கபலமாக இருப்பவர் இசைப்புயல் ஏஆர். ரகுமான்.
அவரின் இசையில் இவரின் படைப்பில் உருவாகி வரும் படம் பெரும்பாலும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துபவையாக அமையும். அந்த வகையில் காதலன் படத்தில் ஏஆர். ரகுமான் இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட். அந்த வகையில் காதலன் படத்தை எடுத்து முடித்த கையோடு முதன் முதலாக வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்காக விசா பெறுவதை ஒட்டி அமெரிக்கா தூதரகம் சங்கரை நேர்காணலுக்கு அழைத்ததாம்.
அங்கு இவரை பற்றி நிறைய கேள்விகள் கேட்டு கேட்டு பதற்றமடைய வைத்திருக்கிறார்கள். அப்போது அந்த நிறுவனத்தில் தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர் வேலை பார்க்க சங்கரை பார்த்ததும் இவர் வளர்ந்து வரும் இயக்குனர் என்று சொல்லி அறிமுகப்படுத்தினாராம். அப்போது எந்த படத்தை எடுத்துள்ளீர் என நிறுவனம் கேட்க ’காதலன்’ என்று சொல்லியும் அவர்களுக்கு தெரியவில்லையாம். அப்போது ‘முக்கால முக்காப்ல’ என்ற பாட்டை பாடி காண்பித்ததும் பதில் எதும் பேசாமல் உடனே விசாவை வழங்கி விட்டதாம் அமெரிக்கா நிறுவனம்.