Ajith: தீவிர ரசிகரா இருப்பாரோ?!... கமல்ஹாசனுக்காக அஜித் செய்த விஷயம்... இயக்குனர் சொன்ன சீக்ரெட்..!

by ramya suresh |   ( Updated:2024-11-09 15:50:17  )
Ajith: தீவிர ரசிகரா இருப்பாரோ?!... கமல்ஹாசனுக்காக அஜித் செய்த விஷயம்... இயக்குனர் சொன்ன சீக்ரெட்..!
X

#image_title

நடிகர் அஜித்தை வைத்து பல திரைப்படங்களை இயக்கிய சரண் அஜித்தை குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.

நடிகர் அஜித்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார். கைவசம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களை வைத்திருக்கின்றார். அதுமட்டுமில்லாமல் கார் ரேசிலும் கவனம் செலுத்தி வருகின்றார் நடிகர் அஜித்.

ரிலீஸ் தேதி: 2 வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாமல் இருந்து வருகின்றது. அதையடுத்து தொடங்கிய குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிந்து விட்டதாக கூறப்படுகின்றது. விடாமுயற்சி திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: Karthi: அஜித்தை கழட்டிவிட்ட சிறுத்தை சிவா!… தம்பி நடிகருடன் கூட்டணி!… அந்த படத்தோட லைன் அப்-போ?!…

அதே சமயம் குட் பேட் அக்லி திரைப்படமும் பொங்கலுக்கு தான் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருப்பதால் குட் பேட் அக்லி திரைப்படம் தள்ளி போவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகின்றது. எது எப்படியோ அஜித்தின் ஏதாவது ஒரு திரைப்படம் வெளியானால் போதும் என்ற நிலைமைக்கு ரசிகர்கள் வந்து விட்டார்கள்.

ஏனென்றால் கடந்த இரண்டு வருடங்களாக அஜித்தின் எந்த திரைப்படம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்து வருகிறார்கள். ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீடு இன்னும் தள்ளி போவதற்கு வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.

இயக்குனர் சரண்: பிரபல இயக்குனர் அஜித் குறித்து சில விஷயங்களை பேசி இருக்கின்றார். அது தற்போது வைரலாகி வருகின்றது. நடிகர் அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றிகொடுத்தவர் சரண். அஜித்தின் ஆசான இயக்குனர் என்றே இவரை கூறலாம். இவர் நடிகர் அஜித் குறித்து நெகிழ்ச்சியாக பேசி இருக்கின்றார்.

அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்ததாவது 'நடிகர் அஜித்தை வைத்து அட்டகாசம் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது தனக்கு கமலஹாசன் உடன் இணைந்து வசூல்ராஜா திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. வசூல்ராஜா படத்தை உடனடியாக எடுத்து முடிக்க வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டது. இதனால் அட்டகாசம் திரைப்படத்தை எடுப்பதா? அல்லது வசூல்ராஜா திரைப்படத்தை எடுப்பதா? என்ற குழப்பத்திலிருந்தேன்.

இதையும் படிங்க: ரஜினிக்கே விபூதி அடிக்கப்பார்த்த லைக்கா!.. வேட்டையன் படத்தில் நடந்த அந்த சம்பவம்…

அப்போது அஜித் தன்னிடம் மிகவும் சந்தோஷமாக கமல் சாரோட படம் கிடைக்கிறது எல்லாம் மிகப்பெரிய வாய்ப்பு. முதலில் போய் கமல் சாரோட படத்தை எடுத்து முடிங்க. அப்புறம் நம்ம படத்தை பார்த்துக்கலாம். அப்படின்னு சொன்னாரு.. அதுக்குள்ள நானும் வேற ஒரு படத்துல நடிச்சிட்டு வரேன் அப்படின்னு எனக்கு ஆறுதல் சொன்னாரு" என்று அந்த பேட்டியில் நெகிழ்ச்சியாக கூறியிருந்தார். அப்போதுதான் நடிகர் அஜித் கமல் சார் மீது எவ்வளவு பெரிய மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறார் என்பது எனக்கு புரிந்தது என்று சரண் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Next Story