Connect with us

அதையே செஞ்சிட்டு செத்துருக்கலாமடா…ஏன்டா இங்க வந்தோம்னு தோணும்…!!! சீமான் சுர்ர்…பேச்சு..!

Cinema History

அதையே செஞ்சிட்டு செத்துருக்கலாமடா…ஏன்டா இங்க வந்தோம்னு தோணும்…!!! சீமான் சுர்ர்…பேச்சு..!

நடிகரும் இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் சமீபத்தில் நடைபெற்ற ஜிவி பட இசை வெளியீட்டு விழாவில் இவ்வாறு பேசியுள்ளார்.

தம்பி ராமையா நான் நடிக்கிறதை நிப்பாட்டிட்டேன்னு சொல்றாரு. அதெல்லாம் சொல்லக்கூடாது. படம் இயக்குறேன்னு சொல்லு. நடிக்கணும்.கூடாது. நீங்க நடிக்கணும்.

நம் மக்களுக்கு எதைச் சொன்னாலும் திரையில் வந்து சொல்லணும்கற ஒரு பார்வை இருக்கு. பேரறிஞர் அண்ணா அவர்கள் தணிக்கையில்லாத இரண்டே இரண்டு படம் கொடுங்க. நான் தனி திராவிட நாடை அடைஞ்சிக் காட்டுறேன்னு சொன்னா அதுக்கு எவ்வளவு பெரிய ஆற்றல் இருக்குன்னு நீங்களே பாருங்க.

seeman

திரையில் தோன்றுவது எவ்வளவு முதன்மையானது…ன்னு பாருங்க. திரையில் தோன்று வது எவ்வளவு முதன்மையானது? திரையில் வர்ரணும்…என்னையை எடுத்துக்கிட்டீங்கன்னா எங் கப்பா மணிவண்ணன் மொழியிலேயே சொல்றேன். ஸ்கிரீன்ல வர்ரணும்டா, திரையில வர ணும்டா…என்னையப் பாருடா மூணு வருஷமா நடிக்க லடா…தினம் நான் வாரண்டா தொலைக் காட்சியில…இப்ப தான் என் பங்காளி இருக்காருல்ல வடிவேலு…அவரு இல்லாம காட்சிப்படமும் இல்ல…கேலிப்படமும் இல்ல. மீம்ஸ் கிடையவே கிடையாது.

எல்லாத்துக்கும் முக பாவனையைக் கொடுத்து வச்சிருக்காரு. அந்த மாதிரி மேடையில வந்து ரத்தம் வேர்வையா உருகி ஓட..நெஞ்சு வெடிக்க வெடிக்க மக்கள் மேல அக்கறையா 2 மணி நேரம் 3 மணி நேரம் பேசிட்டு தொப்பளா சட்டை எல்லாம் நனைஞ்சி இப்படி நாக்கு வறழ நடந்து போகும்போது பேச்சைக் கேட்டுக்கிட்டு இருந்த அந்த பெண்கள் எல்லாம் தம்பி மாயாண்டி குடும்பத்தார்ல சூப்பரா ஆக்ட் பண்ணியிருந்தப்பா…

அப்ப இவ்ளோ நேரம் பேசனது..!? மார்க்ஸ் சொன்னாரு…ஏங்கல்ஸ் சொன்னாரு…பிளாட்டோ சொன்னாரு…அரிஸ்டாட்டில் சொன்னாரு…சாக்ரடீஸ் சொன்னாரு…அம்பேத்கர் சொன்னாரு…லெனின் சொன்னாரு…புத்தர் சொன்னாரு…எல்லாம் வேஸ்ட். மாயாண்டி குடும்பத்துல நல்லா நடிச்சிருக்காருங்கறது தான் பெரிசாத் தெரியுது.

அதோட அப்படியே நடிச்சிக்கிட்டு செத்;துருக்கலாமடா…இதை என்ன கருமத்துக்குடா வந்தோம்னு தோணும். இதை விட நான் வந்து ரொம்ப கொசுறு. எங்க அப்பா…மகனே நில்லுப்பா…எத்தனை படம்டா இயக்கியிருக்கேன். எவ்வளவு படங்கள்டா எடுத்திருக்கேன். எல்லாரும் பாராட்டிருக்கான்.

நிறைய தேசிய விருது வாங்கியிருக்கேன். என்னைய வந்து நான் தான் தமிழ்த்திரை உலகத்தையே திசை திருப்பினேன்லாம் சொல்றாங்க. முதல் மரியாதை எடுத்தேன். 16 வயதினிலே எடுத்தேன். சிவப்பு ரோஜாக்கள் எடுத்தேன். என்னென்னமோ படம் எடுத்தேன்டா…அன்னைக்கு ஒரு வானொலி நிலையத்துல ஒருத்தனைப் பார்த்தேன்.

kurangu pommai bharathiraja

சார் குரங்கு பொம்மையில சூப்பரா ஆக்ட் பண்ணிருக்கேங்க சார் என்றான்டா..! சே…எனக்கு வாழ்க்கையே வெறுத்துருச்சு. அட எவ்வளவோ படங்கள் எடுத்திருக்கேனடா…அதைப் பத்தி சொல்லுங்கன்னா…குரங்கு பொம்மைல சூப்பரா ஆக்ட் பண்ணிருக்கீங்க…சார்…இதான் நிலைமை.

அது தெரியாம எங்க அண்ணன் வந்து நான் நடிக்கறதை நிப்பாட்டுறங்கறாரு. வீட்டு வாசல முற்றுகை யிட்டுருவான். அவர் வந்தது இயக்குனருக்கு தான். அதுக்குத் தான் பயிற்சி எடுத்தாரு. அவரை வாட்டிக் கொண்டு இருந்த வறுமையை வென்று வந்துட்டாரு. இப்போ மறுபடி மனசுக்குள்ள அந்தக்காலத்து ஆசை இருக்கும்லா…பெருசுகளுக்கு. அந்தக்காலத்துல நான் நினைச்சதை நிறைவேற்றாம இருந்துட்டேன்..அதை நிறைவேற்றிடுவோம்னு நினைக்கிறாரு…

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top