Connect with us

நடிகர், இயக்குனர், அரசியல்வாதி….வெவ்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்த சீமானின் படங்கள் – ஒரு பார்வை

Cinema History

நடிகர், இயக்குனர், அரசியல்வாதி….வெவ்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்த சீமானின் படங்கள் – ஒரு பார்வை

அரசியல்வாதி, நடிகர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர் சீமான். இவர் தற்போது தீவிரமாக முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். நாம் தமிழர் என்ற கட்சியைத் தொடங்கிய இவரது பேச்சில் அனல் பறக்கும்.

கல்லூரிப் படிப்பை முடித்ததுமே சினிமாவில் இயக்குனராகும் கனவு வந்துவிட்டது. மணிவண்ணன், பாரதிராஜா ஆகியோரின் படங்களில் உதவி இயக்குனராக இருந்தார். இவர் இயக்கிய படங்களை விட இவர் நடித்த படங்கள் தான் அதிகம். இவரது முதல்படமே அசத்தலான வெற்றியைப் பெற்றது. அதுதான் பிரபு நடித்த பாஞ்சாலங்குறிச்சி.

இவரது படங்களில் ஒருசிலவற்றைப் பார்ப்போம்.

பாஞ்சாலங்குறிச்சி

panchalankurichi

சீமான் இயக்கத்தில் பிரபு நடிக்க 1996ல் வெளியான படம். பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. பிரபுவுடன் மதுபாலா, வடிவேலு, விஜயகுமார், சந்திரசேகர், பிரசன்னா உள்பட பலர் நடித்துள்ளனர்.

தேவாவின் தேவாமிர்தமான இசையில் பாடல்கள் அனைத்துமே பிரமாதம். ஆனா ஆவன்னா, ஆசை வைச்சேன், சின்ன சின்ன, சின்னவளே, காற்றை நிறுத்தி, ஒரு பக்கம் தேன், உன் உதட்டோர, வந்தீயளா ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்.

வீரநடை

சீமான் இயக்க 2000ல் வெளியான இந்தப்படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். அவருடன் இணைந்து குஷ்பூ, அருண்பாண்டியன், சந்திரசேகர், சபீதா ஆனந்த், பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

தேவா இசை அமைத்துள்ளார். படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. வணக்கம் அண்ணா, காலையிலே கதிர், உசுரவச்சேன் மாமா ஆகிய பாடல்கள் உள்ளன.

தம்பி

Thambi

2006ல் சீமான் இயக்கத்தில் வெளியான அதிரடி திரைப்படம். மாதவன், பூஜா, வடிவேலு, பிஜூமேனன், இளவரசு, மணிவண்ணன், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர்.

வித்யாசாகரின் இசையில் சும்மா கிடந்த, பூவனத்தில் மரம், சுடும் நிலவு, ஓலை குடிசை, கனவா என்று ஆகிய பாடல்கள் உள்ளன. மாதவன் நடிப்பில் உருவான அதிரடி திரைப்படம் இது. ரசிகர்களின் மத்தியில் மெகா ஹிட்டான படம்.

மாயாண்டி குடும்பத்தார்

2009ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் ராசு மதுரவன். சபேஷ் முரளி இசை அமைத்துள்ளார். இந்தப்படம் நகைச்சுவை கலந்த ஒரு குடும்பப்படம். மணிவண்ணன், பொன்வண்ணன், சீமான், தருண்கோபி, கோவிந்தராஜ், ரவி மரியா, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர்.

கலைவாணியே, முதல் மழையே, ஒண்ணா தங்கவே, பேசாம பேசம்மா, பூங்கொடி, வந்தனமய்யா வந்தனம் ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன. இந்தப்படம் பெரும் வெற்றி பெற்றது.

பள்ளிக்கூடம்

pallikoodam

2007ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் தங்கர்பச்சான். நரேன், சினேகா, ஷிரேயா ரெட்டி ஆகியோருடன் இணைந்து இயக்குனர் சீமான் நடித்துள்ளார். தங்கர் பச்சானும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பரத்வாஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். 1978 முதல் 2004 வரையிலான வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சுவாரசியமான படம் இது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top