Connect with us
banner

இயக்குனர் சீனுராமசாமியின் கைவண்ணத்தில் உருவான சூப்பர்ஹிட் திரைப்படங்கள்

Cinema History

இயக்குனர் சீனுராமசாமியின் கைவண்ணத்தில் உருவான சூப்பர்ஹிட் திரைப்படங்கள்

யதார்த்தமான இயக்குனர் பட்டியலில் தற்போதைய ட்ரெண்ட் இவர் தான். இவரது படங்கள் அனைத்துமே சூப்பர்ஹிட் ஆகி விடுகின்றன. நடிகர் விஜய் சேதுபதியின் குருநாதரும் இவர் தான். சமீபத்தில் வெளிவரவுள்ள மாமனிதன் படத்தை இவர் தான் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியை வைத்தே 4 படங்களை இயக்கி விட்டார்.

இவரது வசனங்களைப் பார்த்தால் குறைந்ததாகவும் பொருள் பொதிந்ததாகவும் இருக்கும். இதற்கு அவரது படங்களே சாட்சி. இவரது முந்தைய படங்களும் சூப்பர்ஹிட்தான். அவற்றில் ஒருசிலவற்றைப் பார்ப்போம்.

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அதனாலோ என்னவோ இவரது முதல் படமே கூடல் நகர் தான். அடுத்தடுத்து வந்த இவரது படங்கள் அனைத்துமே தனி முத்திரை பதித்தன.

கூடல் நகர்

2007ல் பரத், சந்தியா மற்றும் பாவனா நடிப்பில் வெளியான படம். பலரது பாராட்டுகளையும் ஒட்டுமொத்தமாகப் பெற்றது. சபேஷ்-முரளி இசை அமைத்தனர். தமிழ் செல்வி, வாரார் அய்யா வாராரு, யாரது யாரது, யக்கா நில்லுக்கா, ஆயிரம் தலையபாத்து, கால்கள் முன்னாலே ஆகிய பாடல்கள் உள்ளன.

தென்மேற்கு பருவக்காற்று

Thenmerku paruvakatru

2010ல் சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான படம். விஜய் சேதுபதி, வசுந்தரா, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதியின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது.

ஆத்தா அடிக்கையிலே, சின்ன சின்னாங்காட்டுல, கள்ளி கள்ளிச்செடி, கள்ளிக்காட்டில் பிறந்த தாயே, ந்ளம், ஏடி கள்ளச்சி ஆகிய பாடல்கள் உள்ளன.

இடம்பொருள் ஏவல்

என்.லிங்குசாமியின் தயாரிப்பில் சீனுராமசாமி இயக்கிய படம். விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்தப்படம் என்ன காரணம் என்று தெரியவில்லை. இன்று வரை ரிலீசாகவில்லை. ஈரக்காத்தே, குறுந்தோகை, எந்த வழி, கொண்டாட்டமே, அத்துவான காட்டுக்கு, வையம்பட்டி ஆகிய பாடல்கள் உள்ளன.

தர்மதுரை

Dharma Durai

2016ல் வெளியான படம். விஜய் சேதுபதி, கஞ்சா கருப்பு, சிருஷ்டி டாங்கே, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். கௌரவத் தோற்றத்தில் ராதிகா நடித்துள்ளார். சீனுராமசாமியின் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் படம் சூப்பர்ஹிட்டானது. எந்தப்பக்கம், ஆண்டிப்பட்டி, போய் வாடா, மக்க கிழங்குதப்பா, நான் காற்றிலே ஆகிய பாடல்கள் உள்ளன.

கண்ணே கலைமானே

2018ல் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ளார். உடன் தமன்னா, வடிவுக்கரசி, பூ ராமு, வசுந்தரா காஷ்யப், வெற்றிக்குமரன் உள்பட பலரது நடிப்பில் வெளியான படம். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப்படத்தின் டைட்டில் கமலின் மூன்றாம்பிறையில் வரும் பாடலின் வரிகள். அழைக்கட்டுமா, நீண்ட மலரே, எந்தன் கண்களை, செவ்வந்திப் பூவே, வா வெள்ளை ராசாத்தி ஆகிய பாடல்கள் உள்ளன.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top