நீங்க பண்றது சரியில்ல?!… ஜோதிகாவை தொடர்ந்து சூர்யாவுக்காக களமிறங்கிய இயக்குனர்!…

Published on: November 18, 2024
---Advertisement---

சூர்யாவிற்கு ஆதரவாக நேற்று ஜோதிகா பேசிய நிலையில் இன்று இயக்குனர் சீனு ராமசாமி பேசியிருக்கின்றார்.

சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் கங்குவா. கடந்த 2  ஆண்டுகளாக இயக்குனர் சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. கங்குவா படம் வெளியானது முதலே தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

சூர்யாவின் கெரியரில் வெளியான திரைப்படங்களிலேயே இந்த அளவுக்கு மோசமான விமர்சனத்தை எந்த திரைப்படமும் சந்தித்தது கிடையாது. அதற்கு காரணம் படக்குழுவினர் தான். ப்ரோமோஷன் என்கின்ற பெயரில் மேடைக்கு மேடை படம் குறித்து ஓவர் பில்டப் கொடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருந்தார்கள்.

இதையும் படிங்க: ரஜினிக்கும் இளையராஜாவுக்கும் என்னதான் பிரச்சனை? வீராவுக்குப் பிறகு இசை அமைக்கவே இல்லையே..!

இதனால் இப்படத்தின் மீது அந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால் அவை அனைத்துமே படம் பார்த்த பிறகு இல்லை என்று தெரிந்த உடனே ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்தார்கள். இதனால் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் நெகட்டிவ் விமர்சனங்களை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை ஜோதிகா நேற்று சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ‘கங்குவா படத்தின் மீது வேண்டும் என்றே எதிர்மறை விமர்சனங்கள் வைக்கிறார்கள். முழுமையான மூன்று மணி நேரத்தில் இருந்து முதல் அரை மணி நேரம் மட்டும்தான் சரி இல்லை. இருந்தாலும் இது ஒரு முழுமையான சினிமா அனுபவம்.

தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத கேமரா வேலையை ஒளிப்பதிவாளர் செய்திருக்கின்றார். படத்தில் இருக்கும் நெகடிவ் மட்டும் பேசும் பலரும் அதில் இருக்கும் நல்ல விஷயங்களை எதற்கு பாராட்டுவது கிடையாது. பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின் தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்ற படங்களுக்கு இந்த அளவிற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வருவதில்லை’ என்று தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.

ஆனால் நடிகை ஜோதிகாவையும் நெட்டிசன்கள் விட்டு வைக்கவில்லை. அவரது கருத்துக்கும் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பிரபல இயக்குனரான சீனு ராமசாமி சூர்யாவுக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்வது என்பது அவரவர் சுதந்திரம்.

கல்விப் பணிக்கு வெகு காலம் நன்மை செய்து வரும் சூர்யா சிவகுமார் போன்றவர்களை தனிப்பட்ட முறையில் அவதூறு செய்வது என்பது மிகவும் வருத்தத்தை தருகின்றது. திரைத்துறைக்கும் அதனை சார்ந்த ஏனைய தொழில் முனைவோர்களுக்கும் பாதுகாப்பற்ற தன்மையை இது உணர்த்துகின்றது என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ஜோதிகா சொன்ன டபுள் மீனிங் வசனம் உள்ள படம் விஜய் நடிச்ச கோட்?!.. அதுவும் இந்த காட்சியா?!

இந்த பதிவானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நாங்கள் கங்குவா திரைப்படம் குறித்து மட்டும் தான் விமர்சனம் செய்து வருகின்றோம். அதில் நடித்துள்ள எந்த நடிகர்களையும் தவறாக பேசவில்லை. படம் குறித்து படக்குழுவினர் மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்திருந்தார்கள். இதை நம்பி படம் பார்த்த எங்களுக்கு ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியது என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.