Director Selvaragavan : தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் அவர்கள் எடுத்த ஏதாவது ஒரு படம் மைல் கல்லாக இருக்கும். காலம் கடந்தும் அந்த படத்தை பார்க்கும் பொழுது இந்த படத்தில் எத்தனை விஷயங்கள் இருக்கிறதா என்ற உண்மை தாமதமாக தான் ரசிகர்களுக்கு தெரிய வரும்.
அந்த வகையில் செல்வராகவன் படங்களும் காலம் கடந்தும் இன்று வரை பேசப்பட்டு வருகின்றது. மகேந்திரன், பாலு மகேந்திரா இவர்கள் வரிசையில் செல்வராகவன் எடுத்த திரைப்படங்களும் ரசிகர்களின் மத்தியில் நின்று பேசப்படுபவையாக இருக்கின்றன. ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற திரைப்படத்தை எடுத்து ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் வரவேற்பை பெற்றார் செல்வராகவன்.
இதையும் படிங்க: 14 வருடத்துக்கு பின்னர் கோலிவுட்டில் நடிக்க வரும் மல்லுவுட் பிரபலம்.. எஸ்கேவால் செம விஷயம் நடந்து இருக்கே?
அதற்கு முன் எத்தனையோ படங்களை அவர் இயக்கி இருந்தாலும் கிராபிக்ஸ் பற்றி சரியாக தெரியாத நேரத்தில் கிராபிக்ஸ் நுணுக்கங்களை மிக தெளிவாக இந்த படத்தின் மூலமாகத்தான் செல்வராகவன் ரசிகர்களுக்கு காட்டினார். அதுமட்டுமல்லாமல் அவர் எடுத்த படங்களிலேயே ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் தான் அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.
இப்படி தொடர்ந்து பல படங்களை இயக்கியிருந்தாலும் ‘சாணிக்காகிதம்’ திரைப்படத்தின் மூலம் தான் செல்வராகவன் நடிகராக முதன் முதலாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பீஸ்ட், பகாசுரன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர், நடிகர் என்பதையும் தாண்டி செல்வராகவன் ஒரு நல்ல பாடல் ஆசிரியர் என்பது இந்தப் பாடல்களில் இருந்து தான் நமக்கு தெரிய வருகிறது. இவர் கைவண்ணத்தில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கின்றன. இவர் எழுதிய அந்த சூப்பர் ஹிட் பாடல்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
இதையும் படிங்க: நாசுக்காக ராதிகா கர்ப்பத்தை லீக் செய்ய பார்த்த கோபி… செம பல்ப் கொடுத்த செழியன்…
ஆயிரத்தில் ஒருவன் – உன் மேல ஆசைதான்
மயக்கம் என்ன – நான் சொன்னதும் மழை வந்துச்சா
பா பாண்டி – பார்த்தேன் களவு போன
துள்ளுவதோ இளமை – கண்முன்னே எத்தனை நிலவு
நெஞ்சம் மறப்பதில்லை – அனைத்து பாடல்கள்
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…