விஜய் அப்பா சொன்னது என்ன? ஷங்கர் செய்தது என்ன? டைரக்டர் ஆக அதுதான் காரணமா?
ஷங்கர் தமிழ்த்திரை உலகைப் பொருத்தவரை பிரம்மாண்ட இயக்குனர் என்று அறியப்படுகிறார். ஆனால் அவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன் என்ன வேலை பார்த்தார் தெரியுமா? நாடகங்களில் நடிப்பாராம்.
ஒருமுறை சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் எழுந்துள்ளது. நடிப்பதற்கு வாய்ப்பு தேடி அலைந்தால் எளிதில் கிடைக்காது. உதவி இயக்குனராகி விடுவோம். அப்புறம் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடும் என்று நினைத்துள்ளார்.
அந்த சமயத்தில் நாடகங்களில் நடித்துள்ளார். இடையிடையே அவர் தனது சொந்த வசனங்களையும் சேர்த்து பேசுவாராம். அப்படி ஒரு நாடகத்தில் நடித்துள்ளார். அந்த நாடகத்தை விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஒருமுறை பார்க்க நேர்ந்தது.
அதைப் பார்த்ததும் ஷங்கரை அழைத்துள்ளார். இந்த நாடகத்தை எழுதியது யார என்று கேட்டாராம். அது எழுத்தாளர் தான். ஆனால் நானும் சில இடங்களில் எழுதியுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார் ஷங்கர். அதை மனதில் வைத்திருந்த எஸ்.ஏ.சி., ஒரு நாள் ஷங்கரை அழைத்துள்ளார்.
தான் இயக்கும் படம் ஒன்றுக்கு காமெடி டிராக் மட்டும் எழுது என்று சொல்லி இருக்கிறார். உடனே அவர் சொன்னபடி ஷங்கர் காமெடி எழுதி இருக்கிறார். அது எஸ்.ஏ.சி.க்கு ரொம்பவும் பிடித்து விட்டது. அவரும் ஏதோ ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார். ஆனால் படம் ஓடவில்லை.
உடனே இது நம்மோட ஏரியா இல்லையே என உணர்ந்து கொண்டார். என்ன செய்வது என்று யோசித்துள்ளார். அப்போது தான் அவருக்கு ஒரு ஐடியா வந்துள்ளது. விஜயின் அப்பாவிடம் தான் கற்ற இயக்குனருக்கான வேலைகளை நினைவு படுத்திப் பார்த்துள்ளார். அப்புறம் நாம் ஏன் இயக்குனராகக் கூடாது என்ற எண்ணம் எழுந்துள்ளது.
எப்படியாவது ஒரு படத்தையாவது இயக்கி விட வேண்டும் என்று அப்போது நினைத்தாராம். அதற்கான வாய்ப்பும் வரும்போது முதல் படமான 'ஜென்டில்மேன்'லயே அழுத்தமான முத்திரையைப் பதித்து விட்டார்.