அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்!.. ஷங்கர் கொடுத்த சரியான பதிலடி!.. எப்பவும் மறக்க மாட்டாரு!..

Shankar
90களில் தமிழ்ப்பட உலகின் பிரம்மாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். இவர் தயாரிப்பில் உருவான படம் ஜென்டில் மேன். ஷங்கர் இயக்க, ஏஆர்.ரகுமான் இசை அமைத்தார். படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்பட பலரும் நடித்திருந்தனர். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்திற்காக பிரபுதேவா ஸ்பெஷலாக சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருப்பார். படம் வெளியான ஆண்டு 1993.
இந்தப் படத்தில் முதலில் உலகநாயகன் கமல் நடிப்பதாக இருந்ததாம். ஷங்கர் இந்தக் கதைக்கு கமல் தான் பொருத்தம் என்றாராம். ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காததால் சரத்குமாரை நடிக்க வைக்க முயற்சித்தனர்.

Gentle man
ஒரு சில காரணங்களால் சரத்குமாரும் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. உடனே அடுத்து யார் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவர் என்று யோசித்த போது ஆக்ஷன் கிங் அர்ஜூன் என்று முடிவு செய்தனர். கடைசியில் அவரையே தேர்வு செய்து விட்டார்களாம்.
இந்தப் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு வசனமும் ஒரு காரணம். எழுதியது பிரபல எழுத்தாளர் பாலகுமாரன். படம் வெளியானதும் முதல் 3 நாள்கள் சரியாக ஓடவில்லை. அதன்பிறகு படத்திற்கான பாசிட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. அப்புறம் தான் படம் செம பிக் அப் ஆனதாம்.

KT.Kunjumon
இந்த நிலையில் படம் நன்றாக ஓடியதும், இயக்குனர் ஷங்கர் கே.டி.குஞ்சுமோனைப் பார்க்கச் சென்றாராம். பேசியதை விட அதிகமாக ஒரு லட்ச ரூபாய் வேண்டும் என்று கேட்டாராம். ஆனால் அதெல்லாம் முடியாது என்று சொன்ன குஞ்சுமோன், வேண்டுமானால் இன்னொரு வாய்ப்பு தருகிறேன் என்று சொன்னாராம். அப்படி உருவானது தான் காதலன் படம். அந்தப் படத்தின்போதே இருவருக்கும் பிரச்சனை வர, போஸ்டரில் கூட ஷங்கரின் பெயரைப் போடவில்லையாம். ஆனாலும், படம் மாஸ் ஹிட் ஆனது.
வாழ்க்கைங்கறது வட்டம்னு சொன்ன மாதிரி ஒரு காலகட்டத்தில் கே.டி.குஞ்சுமோன் தயாரித்த படங்கள் எல்லாமே அட்டர் பிளாப்பானது. அதே நேரம் ஷங்கர் இயக்கிய படங்கள் எல்லாமே செம மாஸானது. தமிழ் சினிமா உலகின் நம்பர் ஒன் இயக்குனர் என்றாலே அவர் தான் என்று ஆகி விட்டார்.
அப்போது கே.டி.குஞ்சுமோன் 'எனக்கு ஒரு படத்தை இயக்கித் தருவாயா?... அப்போது தான் என் கடன்களை எல்லாம் அடைக்க முடியும் என்று கேட்டாராம். ஆனால், ஏற்கனவே பட்ட அவமானங்களை மனதில் தேக்கி வைத்திருந்த ஷங்கர் அதெல்லாம் முடியாது என்று மறுத்து விட்டாராம்.