ஷூட்டிங்கிற்கே வராமல் இந்தியன் 2 படத்தை இயக்கும் ஷங்கர்...? என்னப்பா சொல்றீங்க!

by Arun Prasad |
Indian 2
X

Indian 2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் “இந்தியன் 2” திரைப்படம் உருவாகி வரும் செய்தியை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.

Indian 2

Indian 2

“இந்தியன் 2” திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதே வேளையில் இயக்குனர் ஷங்கர், ராம் சரணை வைத்து தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Indian 2

Indian 2

இவ்வாறு கோலிவுட், டோலிவுட் என்று ஷங்கர் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் தான் எப்போதெல்லாம் ராம் சரண் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நேரிடுகிறதோ, அந்த வேளைகளில் மட்டும் “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பை கவனித்துக்கொள்வதற்காக இயக்குனர் வசந்தபாலனையும் அறிவழகனையும் நியமித்து இருக்கிறாராம் ஷங்கர்.

அதாவது ஷங்கர், ராம் சரண் திரைப்படத்தில் பிசியாக இருக்கும் வேளைகளில் மட்டும் வசந்தபாலனும், அறிவழகனுமே “இந்தியன் 2” திரைப்படத்தை இயக்குகிறார்களாம். மேலும் “இந்தியன் 2” திரைப்படத்தின் காட்சிகளை படமாக்கும்போது சந்தேகங்கள் எழுந்தால் வீடியோ கால் மூலம் ஷங்கருக்கு தொடர்புகொண்டு அந்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்கிறார்களாம். இவ்வாறு ஷங்கர் பெரும்பாலும் படப்பிடிப்புத் தளத்தில் கலந்துகொள்ளாமலேயே “இந்தியன் 2” திரைப்படத்தை இயக்கி வருகிறாராம்.

இதையும் படிங்க: விஜய்க்கு கொக்கிப் போட நினைத்த கமல்… நைசாக நழுவி எஸ்கேப் ஆன தளபதி… என்னவா இருக்கும்!!

Vasanthabalan and Arivazhagan

Vasanthabalan and Arivazhagan

இயக்குனர் வசந்தபாலனும், இயக்குனர் அறிவழகனும் தொடக்க காலத்தில் ஷங்கரிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.

Next Story