கடுப்பான ரஜினி!.. இந்தியன் 2-வுக்கு வேற பிளான் போட்ட ஷங்கர்!.. எல்லாத்துக்கும் காரணம் லைக்காதானாம்!..

Indian 2: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் தயாராகிக் கொண்டு வரும் திரைப்படம் இந்தியன்2. இந்தியன் 2 படம் மட்டுமல்லாமல் வேட்டையன், விடாமுயற்சி போன்ற அடுத்த அடுத்த மிகப்பெரிய படங்களை தன்வசம் வைத்திருக்கும் லைக்கா நிறுவனம் இந்தியன் 2 திரைப்பட த்தை ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது.

இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரஜினியை அழைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் லால் சலாம் திரைப்படத்தை சரிவர விளம்பரம் செய்யாததால் லைக்கா நிறுவனத்தின் மீது ரஜினி அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: திட்டி பேசிய ரஜினி!.. அமைதியாக இருந்த தயாரிப்பாளர்!.. ஜெயலலிதாவுக்கு வந்த கோபம்!..

அது மட்டும் இல்லாமல் வேட்டையன் திரைப்படத்தின் போதும் லைக்காவிற்கும் ரஜினிக்கும் ஏதோ சில பிரச்சனைகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது .அதனால் அதை கருத்தில் கொண்டு ரஜினி இந்த விழாவிற்கு வரமாட்டார் என்று சில தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் ஷங்கர் இந்த விழாவை மேலும் பிரம்மாண்டப்படுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியையும் அவருடைய மகனும் நடிகருமான ராம் சரணையும் அழைக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

ஒரு பக்கம் சிறப்பு விருந்தினராக எடுத்துக் கொண்டாலும் ராம்சரனை வைத்து ஷங்கர் கேம் சேஞ்சர் என்ற படத்தை எடுத்து வருகிறார். அதனால் இந்த இசை வெளியீட்டு விழாவை பயன்படுத்திக் கொண்டு கேம் சேஞ்சர் படத்தை புரமோஷன் செய்யும் வகையில் ராம் சரணை இந்த விழாவிற்கு ஷங்கர் அழைப்பார் என்று தெரிகிறது. ஆக மொத்தம் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் போல ஷங்கர் இந்த இந்தியன் 2 விழாவை தனக்கு சாதகமாக்கி கொள்வார் என்றே சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: அட்ஜெட்ஸ் பண்றதுல என்ன தப்பு?.. பேட்டி கொடுத்து வாய்ப்புகளை அள்ளிய பூனைக்கண் புவனேஸ்வரி!..

 

Related Articles

Next Story