ரஜினிக்காக எழுதிய கதையில் கமல் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் இதுதான்...!
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் என்றாலே அனைவருக்கும் தெரியும். அவர் படங்கள் எல்லாமே செமயாக இருக்கும். ரசிக்க வேண்டிய காட்சிகள், கிராபிக்ஸ் காட்சிகள் என்று ஏராளமானவை இருக்கும்.
1996ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது இந்தியன். இந்தப்படத்தில் கமல் முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து இருந்தார். அதிலும் இந்தியன் தாத்தாவாக வரும் கமல் அட்டகாசமான நடிப்பு. அவர் சுதந்திரப் போராட்ட வீரராக வருவார்.
படத்தில் சேனாபதி என்ற கேரக்டரில் வரும் இந்தியன் தாத்தா ஸ்டைலிலும் வெளுத்து வாங்குவார். அவர் கொலை செய்யும் காட்சிகள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். படத்தில் வர்மக்கலை நிபுணராக வேறு கமல் அசத்துவார். இரு விரல்களை மடக்கியபடி குத்து விட்டு எதிரிகளை பந்தாடுவார். ஒரு தாத்தாவுக்கு இவ்வளவு தில்லா என்று படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
இவரைப் பார்ப்பதற்கென்றே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்குச் சென்றனர். படம் ரிலீஸாகி ரெண்டு வாரம் டிக்கெட் கிடைக்கவில்லை. படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் கிடைத்தது. படம் வெற்றிகரமாக ஓட இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்றால் இந்தப்படத்தின் கதைக்கரு.
லஞ்சம் தான். படத்தில் ஊழலுக்கு எதிரான கதையை தைரியமாக எழுதி இயக்கியிருந்தார் ஷங்கர். அது பாமர மக்களையும் பாதிக்கக்கூடிய விஷயம் என்பதால் இப்போது பார்த்தாலும் அனைவருக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கும். அது சரி...இந்தப்படத்தில் ஒரு விசேஷமான தகவல் ஒன்று உள்ளது. அது என்ன என்று பார்ப்போமா...
இதுகுறித்து இயக்குனர் ஷங்கர் பேட்டி ஒன்றில் இவ்வாறு சொல்கிறார்.
கமல் சார் மேக் அப் டெஸ்ட் எடுக்கும்போது இந்தியன் தாத்தாவோட உடையை போட்டு ஸ்டில் எடுத்துப் பார்த்தோம். பேனா எல்லாம் வைத்து டெஸ்ட் எடுத்தோம். அவரு 3 பேனா கொண்டு வந்தாரு. இது பழைய காலத்து பேனா. இங்க் இப்படி தெளிக்கணும். அவ்ளோ மெனக்கெடுவார்.
முதல்ல அந்தக்கதை ரஜினி சார்க்கிட்ட சொல்லிருந்தேன். அப்புறம் கமல் சாரோட பண்ணும்போது மைண்ட்ல சில விஷயம் தங்கிருந்தது. அதுல பார்த்தீங்கன்னா இன்டர்வல் சீன் வரும். அப்போ சிபிஐ ஆபீசர் கேரக்டர் வந்து அவர அரஸ்ட் பண்ண வரும். அப்படி வரும்போது அவரைத் தாக்கறதுக்காக ஈசி சேர்ல இருக்குற பலகையை கையால் சட்டுன்னு தட்டுவார்.
அப்புறம் எந்திரிச்சி தோள்ல துண்ட தூக்கிப் போட்டுட்டு அந்த தலைமுடிய அட்ஜஸ்ட் பண்ணனும்னு ஸ்கிரிப்ட்ல எழுதிருந்தேன். இது ரஜினி சார மைண்ட்ல வச்சி எழுதினது. ஆனா....இதை ரஜினி சார மைண்ட்ல வச்சி எழுதினது...சார் எப்படி எடுத்துக்கப்போறாருன்னு தயங்கிக்கிட்டே போய் அவருக்கிட்ட எடுத்துச் சொன்னேன்.
அவரு ஒண்ணுமே சொல்லல. சரின்னுட்டு கேமரா ஆன் பண்ண உடனே பண்ணுனாரு. ஆனா அதுல ஒரு துளி கூட ரஜினியோட சாயல் இல்ல. டோட்டலி டிப்ரண்ட். அதுல அந்த கதாபாத்திரத்தோட சாயல் தான் இருக்கும்.
இந்தப்படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 படத்திற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.