சொல்லவே இல்ல!.. இயக்குனர் ஷங்கருக்கு இப்படி ஒரு ஆசை இருக்கா?...

by சிவா |
shankar
X

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெடில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன், எந்திரன் என இவர் எடுத்த படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இவர் படங்களை இயக்கியதோடு மட்டுமில்லாமல் காதல், இம்சை அரசன் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.

arjith

இவரின் மகள் அதிதி தற்போது நடிகையாக மாறியுள்ளார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் விருமன் படத்தில் அதிதான் கதாநாயகி.

arjith

இந்நிலையில், ஷங்கரின் மகன் அர்ஜித் விரைவில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அர்ஜித்துக்கு தான் ஒரு இயக்குனராகும் ஆசை இருக்கிறது. எனவே, வெளிநாடு சென்று இதற்கான படிப்புகளையெல்லாம் அவர் படித்துள்ளார். ஆனால், ஷங்கருக்கு தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என ஆசையாம்..

என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

Next Story