Connect with us

Cinema History

இயக்குனர் ஷங்கரின் யோசிக்க வைத்த அந்த சென்டிமென்ட் படங்கள்…ஒரு பார்வை

பிரம்மாண்ட பட இயக்குனர் யார் என்றால் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் ஷங்கர்.

இவர் பல படங்களில் அதாவது டைட்டில்களில் ஒரு ஒற்றுமையைக் காட்டியிருப்பார். என்னன்னா அவரது படங்களில் பெரும்பாலானவை ன் என்ற எழுத்தில் தான் முடியும். அது ஏன் என்றால் அது அவரது சென்டிமென்ட். அந்தப் படங்கள் தான் மெகா ஹிட்.

அவை என்னென்ன என்று பார்க்கலாமா….

ஜென்டில் மேன்

Gentleman

1993ல் வெளியான படம். டைரக்டர் ஷங்கரின் இயக்கத்தில் படம் பிரம்மாண்டம் மட்டுமல்ல கதையும் செம டச்சிங்காக இருந்தது. படத்தின் வசனத்தை எழுத்தாளர் பாலகுமாரன் எழுதியுள்ளார்.

கே.டி.குஞ்சுமோன் தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரமா, வினீத் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றது.

காதலன்

Kathalan

பிரபுதேவாவுக்கும் அவரது நடனத்திற்கும் இந்தப்படம் விருந்தாக அமைந்தது. அப்படி ஒரு டான்ஸ்…இந்தப்படம் இளம் ரசிகர்களின் உள்ளங்களை அக்காலத்தில் கொள்ளை கொண்டது. 80ஸ்…90ஸ் குட்டிகளுக்கு இந்தப்படம் செம விருந்து.

பிரபுதேவாவுடன் நக்மா, வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். பாலகுமாரன் வசனம் எழுதிய இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இயக்குனர் ஷங்கரின் இயக்கம் வழக்கம்போல் பிரம்மாண்டம் தான். படம் வெளியான ஆண்டு 1994.

இந்தியன்

1996ல் வெளியான இந்தப்படம் கமலுக்கும் சரி. இயக்குனர் ஷங்கருக்கும் சரி. மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. கமலின் நடிப்பு அபாரமானது. அதுவும் இரட்டை வேடம். அதிலும் இந்தியன் தாத்தாவாக வந்து அவர் கலக்கியதை இன்றும் மறக்க முடியாது.

அதனால் தான் 26 வருடங்களுக்குப் பிறகும் கூட அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார்கள். அந்த விறுவிறுப்பு இன்னும் குறையவில்லை. கமலுடன் மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா, நாசர், கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் தெறிக்கவிட்டன.

முதல்வன்

1999ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் ஷங்கர். அர்ஜூன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், வடிவேல் உள்பட பலர் நடித்துள்ளனர்.

2000ல் சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் அருமை. தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ரீமேக் ஆனது.

அந்நியன்

Anniyan

2005ல் வெளியான இந்தப்படம் மிகப்பிரம்மாண்டமான படம் என்ற பெயரைப் பெற்றது.

ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் ஒரு அழுத்தமான கதை அம்சம் கொண்ட ரசனையான படம். சுஜாதா வசனம் எழுத, இந்தப்படத்திற்கு மட்டும் இசையில் ஏ.ஆர்.ரகுமான் மிஸ்சிங். ஹாரிஸ் ஜெயராஜ் அந்த இடத்தை நிரப்பியுள்ளார். விக்ரமுடன் சதா, விவேக், பிரகாஷ் ராஜ், நாசர், கலாபவன் மணி உள்பட பலர் நடித்துள்ளனர்.

எந்திரன்

Enthiran

2010ல் சன் பிக்சர்ஸின் தயாரிப்பில் வெளியான படம். இயக்குனர் ஷங்கர் இந்தப்படத்தில் கிராபிக்ஸில் புகுந்து விளையாடியுள்ளார். ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய், சந்தானம், கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரஜினி இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய படம். அதிலும் ரோபோவாக வந்து கலக்கும் வேடம் செம மாஸ்.

நண்பன்

Nanban

படத்தின் பெயரை விட கதை மிக முக்கியம். ரசிகர்களுக்கு அடுத்து என்ன? அடுத்து என்ன என்று யோசிக்க வைக்கும் கதைகளே வெற்றி பெறும். அடிக்கடி சர்பிரைஸ்கள், சஸ்பென்ஸ்கள் இருக்க வேண்டும். அது தான் சூப்பரான திரைக்கதை.

அப்படி இருந்தால் தான் அது சுவாரஸ்யமாக இருக்கும். இந்தப்படமும் அப்படிப்பட்டது தான். 2012ல் வந்தது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜின் இசை படத்தில் அருமையாக வந்துள்ளது.

google news
Continue Reading

More in Cinema History

To Top