தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். பிரம்மாண்டம் என்பதெல்லாம் இப்போது அவருக்கு வொர்க் அவுட் ஆகவில்லை. ஆரம்பத்தில் அவருடைய படங்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் புது புது இயக்குனர்களின் அவதாரம் ஷங்கரின் மவுசு குறைந்து போவதற்கும் காரணமாக அமைந்தது.
அதற்கேற்ப அவருடைய சமீபகால படங்களும் காலை வாரியது. குறிப்பாக இந்தியன் 2 படம் மிகப்பெரிய அளவில் மோசமான விமர்சனத்தை சந்தித்தது. வசூலில் மண்ணை கவ்வியது. அதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய அடியாகவும் இருந்தது. அதற்கு அடுத்து அவரின் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படமும் மோசமான தோல்வியை தழுவியது.
கேம் சேஞ்சர் படத்தை பொறுத்தவரைக்கும் பாடலை மட்டும் மிகப்பெரிய பொருட்செலவில் படமாக்கினார். ஷங்கர் அடுத்து வேள்பாரி நாவலை கையில் எடுத்திருக்கிறார். அதற்கான வேலைகள் தான் தற்போது நடந்து வருகின்றன. நாவலை பொறுத்தவரைக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நாவல். அதனால் கதை எல்லாருக்கும் தெரிந்தது என்றாலும் படமாக அதை பெஸ்ட்டாக கொடுக்க வேண்டும்.
இந்த நிலையில் ஷங்கரின் மகன் அர்ஜித் இப்போது ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். ஏற்கனவே ஷங்கரின் மகள் அதிதீ சங்கரும் ஹீரோயினாக தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது அவருடைய மகனும் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் அர்ஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்க உள்ளார் என்பதுதான்.

இப்போது அனைவருக்கும் ஒரு கனவுக்கன்னியாக வலம் வரும் மமிதா பைஜுதானாம். ஜன நாயகன் படத்தில் மமிதா பைஜூ முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். கோலிவுட் பக்கம் இப்போதுதான் பிரபலமாகி வருகிறார் மமிதா பைஜு.
