கோபத்தில் ரசிகர்கள் செய்த வேலை!.. லட்சக்கணக்கில் அபராதம் கட்டிய அஜித்!.. நடந்தது இதுதான்!..

ajith
Ajith:தமிழ் சினிமாவைப் பொறுத்த வரைக்கும் அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். ரசிகர்களுடன் உரையாடுவது அவர்களை சந்திப்பது பொது இடங்களில் கலந்து கொள்வது என இந்த மாதிரி எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்காத அஜித் மீது ரசிகர்கள் இந்த அளவு அன்பையும் பாசத்தையும் கொட்டுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் என்ன என தெரியாமல் திரையுலகில் இருக்கும் பல பிரபலங்களே ஆச்சரியப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
அந்த அளவுக்கு அஜித் மீது தங்கள் உயிரையே வைத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். ஆரம்பத்தில் ரசிகர்கள் செய்த செயலால் கடுப்பான அஜித் ரசிகர் மன்றத்தையே கலைத்தார். ஆரம்ப காலங்களில் அஜித் படத்தின் படப்பிடிப்புகள் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வந்தது. ஆனால் அங்கும் அஜித்த ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி அனைவரையும் தலைகுனிய வைத்தது.
இதையும் படிங்க:அப்பவே ஆரம்பிக்கப்பட்ட இளையராஜாவின் பயோபிக்! வடிவேலு ஹீரோவா? ஏன் வெளிவரல தெரியுமா?
குறிப்பாக அஜித்தை மிகவும் கோபத்திற்கு ஆளாக்கியது. அதன் காரணமாகவே சென்னை மற்றும் உள்ளூர்களில் ஏதாவது படப்பிடிப்பு என்றால் அஜித் அதற்கு சம்மதிக்கவே மாட்டார். இதன் காரணமாகத்தான் அவர் வெளிநாடு மற்றும் ஹைதராபாத்தில் தன்னுடைய படப்பிடிப்பை வைத்துக் கொள்ள சொல்கிறார். இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான சிங்கம் புலி அஜித்தை பற்றிய ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார்.
அஜித்தை வைத்து ரெட் என்ற படத்தை இயக்கியவர் தான் சிங்கம் புலி. அந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்றதாம். அப்போது அந்த நேரத்தில் ஒரு திருமண விழாவிற்கு அஜித்தும் சிங்கம் புலியும் செல்வதாக இருந்திருக்கிறது. ஆனால் அஜித் வருவதை அறிந்த ரசிகர்கள் திருமண மண்டபத்தின் முன்னாடி கூட்டம் கூட்டமாக நின்று இருக்கின்றனர்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்தில் டி.எம்.எஸ் பாட துவங்கியது இப்படித்தான்… செம பிளாஷ்பேக்..
இதை தெரிந்து கொண்ட அஜித் அந்த திருமணத்திற்கு வராமலேயே போய் விட்டாராம். இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் மண்டபத்தில் ஒரே கலவரம் செய்து அங்கு இருந்த அனைத்து பொருள்களையும் சூறையாடி விட்டார்களாம். இதனால் அங்கு பெரிய டிராபிக்கும் ஏற்பட்டதாகவும் சிங்கம் புலி கூறினார்.

Singampuli
இந்த சம்பவத்திற்கு பிறகு அஜித்தை பார்ப்பதற்காக சென்னைக்கு வந்திருக்கிறார் சிங்கம் புலி. அங்கு சிங்கம்புலியிடம் அஜித் ‘தேவையில்லாமல் இரண்டரை லட்சம் அபராதம் கட்டியதுதான் மிச்சம். பேசாமல் நான் கலந்து கொள்ளும் காட்சிகளுக்கு தனியாக ஒரு செட்டு போட்டு அதை படமாக்கி விடுங்கள். இந்த அளவுக்கு ரசிகர்கள் செய்வார்கள் என நினைக்கவில்லை. அதனால் தனியாக செட் போட்டு எடுத்து விடுங்கள்’ என்று சொன்னதின் பெயரில் தான் ஹைதராபாத்தில் ஒரு செட்டு போட்டு மீதி படப்பிடிப்பை நடத்தினார்களாம்.