கங்குவா திரைப்படத்தின் வெளியிட்டு தேதியை நினைத்து சிறுத்தை சிவா 90 நாட்கள் தூங்காமல் இருந்ததாக ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் கங்குவா. சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ,போஸ் வெங்கட், நடிகர் கருணாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: Kanguva: புலியை கண்டு சூடுபோட்ட பூனையாய் மாறிய ‘கங்குவா’.. சூர்யாவின் கண்ணீர் வொர்க் அவுட் ஆகுமா?
இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருக்கின்றார். மேலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கின்றார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கின்றார். இப்படம் 10 மொழிகளில் வெளியாக இருக்கின்றது. முன்னதாக இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் பின்னர் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் நவம்பர் 14ஆம் தேதிக்கு மாற்றி இருந்தார்கள்.
அதன்படி வரும் நவம்பர் 14ஆம் தேதி சோலோவாக கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இரண்டு பாகங்களாக இயக்கியிருக்கின்றார். இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்தே படக்குழுவினர் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை தொடங்கி விட்டார்கள். அதிலும் நடிகர் சூர்யா இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று படம் குறித்து ப்ரோமோஷன் செய்து வந்தார்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. நடிகர் சூர்யா ஒவ்வொரு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் பேசியதை வைத்து ரசிகர்கள் இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இன்று தமிழக அரசு காலை 9 மணியிலிருந்து இரவு 2 மணி வரை 5 காட்சிகள் என்று சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியிருக்கின்றது.
இது ஒரு புறம் இருக்க சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்து வழக்கு நீடித்து வருகின்றது. ஒரு பக்கம் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 55 கோடியை வழங்காமல் படத்தை வெளியிட முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்து இருக்கின்றது. அதைத் தொடர்ந்து கங்குவா படத்தின் பியூல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 1.60 கோடியை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும்.
தவறும் பட்சத்தில் படத்தை வெளியிடக்கூடாது என்றும் தெரிவித்து இருக்கின்றது. இருப்பினும் படக்குழுவினர் தொடர்ந்து படம் வெளியாகிவிடும் என்ற நம்பிக்கையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் மும்பையில் இன்று ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா, மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் குறித்து பேசியிருந்தார்கள்.
இதையும் படிங்க: 20 ஆண்டுகளைக் கடந்தும் அட்டகாசமான அஜீத் படம்… இப்போ பார்த்தாலும் ‘தல’ கெத்து தான்..!
அதில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை எண்ணி இயக்குனர் 90 நாட்கள் தூங்கவே இல்லையாம். மேலும் நான் 30 நாட்களாக படத்தை எண்ணி தூங்காமல் இருந்து வருகின்றேன் என்று கூறியிருக்கிறார்கள். இதை கேட்ட ரசிகர்கள் ஆமாம் கோர்ட்டில் இப்படி கேஸ் மேல் கேஸ் போட்டு வந்தால் எப்படி தூக்கம் வரும் என்றும், எது எப்படியோ படம் வெளியாகி விடுமா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…