ஒரு ரசிகனா இருந்து ரஜினியை ரசிச்சி எடுத்தபடம் தான் அண்ணாத்த....!!! இயக்குனர் சிவாவின் சூப்பர் அனுபவங்கள்
பெயர் சிவக்குமார். சினிமாவுக்காக சிறுத்தை சிவா 12.08.1927ல் பிறந்தார். இவர் இயக்குனர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறன் கொண்டவர். இவரது சொந்த ஊர் சென்னை. அப்பா பெயர் ஜெயக்குமார். அண்ணன் பெயர் பாலா.
எம்ஜிஆர் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்தார். சார்லி சாப்ளின் என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இவர் இயக்குனராக அறிமுகமான படம் சிறுத்தை. மேலும் சங்கம், வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.
இவர் தயாரிப்பாளர் ஏ.கே.வேலனின் பேரன். இவரது அண்ணன் பாலா தமிழ் மற்றும் மலையாளப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் இவர் தயாரிப்பாளராக வேண்டும் என்றே விரும்பினார். ஆனால் 1998ல் சந்தர்ப்பம் காரணமாக ஒளிப்பதிவாளராகி விட்டார்.
இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் மெகா ஹிட் தான். தனது முதல் படத்திலேயே அதிரடி ஆட்டத்தைத் துவக்கியதால் சிறுத்தை சிவா என்ற பெயர் இவருக்கு வந்து விட்டது.
வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி தல அஜித்தின் அபிமான இயக்குனர் ஆனார்.
சிறுத்தை சிவா தனது திரை உலக பயணங்களை இவ்வாறு சொல்கிறார்.
அண்ணாத்த படம் ரொம்ப சந்தோஷமான அனுபவம். மனநிறைவையும், சந்தோஷத்தையும் கொடுத்தது. விஸ்;வாசம் திரைப்படம் பார்த்ததுக்கு அப்புறம் தான் ரஜினிசார் என்னைக் கூப்பிட்டு படம் எடுக்க வாய்ப்புக் கொடுத்தாரு. விஸ்வாசம் படத்தைப் பார்த்ததும் ரஜினி சார் என்னை மனசாற பாராட்டினாரு.
45 வருஷமா நம்ம ரொம்ப சந்தோஷப்படுத்திக்கிட்டு இருக்குற மிகப்பெரிய திரை ஆளுமை ரஜினிசார் தான். அப்பவே நான் சின்ன வயசுல குண்டாத் தான் இருப்பன். சைக்கிள எடுத்துக்கிட்டு ஒவ்வொரு தியேட்டருக்கா போவேன். டிக்கெட் கிடைக்காது.
அந்த ஓபனிங் ஷோ வந்து மாறி மாறி அலைஞ்சு கடைசியில எங்கேயோ பாரீஸ், போரூர் எல்லாம் தாண்டி போய் படம் பார்க்கும்போது கிடைக்குற சந்தோஷத்துக்கு அளவே இல்ல. சூப்பர்ஸ்டார்னு டைட்டில் வரும். அதுல புள்ளி புள்ளியா இருக்கும். நட்சத்திரம் வரும். சாரோட டயலாக்கா இருக்கட்டும். சாரோட ஸ்கிரீன் பிரசன்ட்ஸா இருக்கட்டும்.
அதைப் பார்த்து அந்த உத்வேகம். மகிழ்ச்சி. அந்த உற்சாகம். அது அப்படியே ஒரு வாரத்துக்கு இருக்கும். அது இறங்குன பிறகு திரும்பி இன்னொரு தடவை போய் பார்த்துருவோம். அது ஒரு அற்புதமான அனுபவம். இந்தப்படம் சூப்பர்ஹிட்ங்கறபோது எனக்குள்ள இருக்குற அந்த ஃபேன் பாய் முழிச்சிக்கிட்டு இருக்குறதை நான் உணர்றேன்.
உதாரணத்துக்கு நயன்ஜி வந்து ஒரு கோர்ட் சீன்ல உண்மையை விட நியாயம்தான் பெரிசுன்னு சார் சொன்னதை அக்சப்ட் பண்ணுவாங்க. சார் பண்ணும்போது கேமரா ஆங்கிள எப்பவும் வைடுல தான் வைப்பேன். அப்ப தான் அவரு என்ன பண்றாருன்னு நல்லா இன்ட்ரஸ்ட்டா ரசிக்க முடியும்.
அப்போ டக்குன்னு ஒண்ணு பண்ணாரு. அப்படியே சரக்குன்னு சுத்தி அங்க போயி நின்னாரு. அது அன்எக்சப்டடா வந்து சார் பண்ண விஷயம். அதைப் பார்த்த உடனே சுத்தி இருக்குற எல்லா பேருமே வந்து பேன் பாயா மாறி விசிலே அடிச்சிட்டாங்க. இந்த மாதிரி நிறைய மூவ்மெண்ட்ஸ் இருக்கு. ஒரு ஃபேனாவும் அவரை ரசிச்சி எடுத்தேன்னு வைங்களேன்.