புது படத்துக்கு சம்பளம் 3 கோடியா?.. இது என்னடா சிவாவுக்கு வந்த சோதனை.!..
கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதன்பின் வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என அஜித்தை வைத்து 4 படங்கள் இயக்கினார். இவரின் விஸ்வாசம் ரஜினியின் பேட்ட பட வசூலை காலி செய்ததால் அவரின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டார் ரஜினி. அப்படி உருவான திரைப்படம்தான் அண்ணாத்த.
அடுத்து சூர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை சிவா இயக்கவுள்ளார். பாலா படம் முடிந்த பின் சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. உண்மையில், சூர்யா - சிவா இணையும் இந்த படத்திற்கான ஒப்பந்தம் 2013ம் ஆண்டே போடப்பட்டது. ஆனால், 8 வருடம் கழித்துதான் இருவரும் இணையவுள்ளனர்.
இதில் சிவாவுக்கு சிக்கல் என்னவெனில் ஒப்பந்தப்படி சிவாவுக்கு கொடுப்பதாக கூறப்பட்ட சம்பளம் ரூ.3 கோடி. 2013ம் ஆண்டு அவரின் சம்பளம் அதுதான். ஆனால், தற்போது அவரின் சம்பளம் 18 கோடி. எனவே, ஒப்பந்தப்படி 3 கோடியா இல்லை தற்போதைய சம்பளத்தை கொடுப்பார்களா என்பது தெரியவில்லை.
இதேபோல்தான் சிவகார்த்திகேயன் வளரும் நேரத்தில் அவரோடு ஸ்டுடியோ நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு ஒப்பந்தம் போட்டது. அப்போது அவருக்கு சம்பளம் ரூ.1 கோடி. சில வருடங்கள் கழித்து சிவகார்த்திகேயன் அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்தார். அப்போது அவரின் சம்பளம் ரூ.10 கோடி. ஆனால், அந்நிறுவனம் அதை கொடுக்க முன்வரவில்லை. எனவே, பஞ்சாயத்து பேசி இறுதியில் சிவகார்த்திகேயனுக்கு ரூ.5 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டது.
தற்போது சிவாவின் நிலைமையும் இதுதான். என்ன நடக்கபோகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.