திரைப்படங்களை பொறுத்தவரை ஒவ்வொரு இயக்குனருக்கும் ஸ்டைல் இருக்கும். அதற்கு எல்லா நடிகர்களும் செட் ஆக மாட்டார்கள். மணிரத்தினம் இயக்கத்தில் பாக்கியராஜ் நடித்தால் எப்படி இருக்கும் என யோசிக்கவே கூடாது. அதேபோல் ராமராஜன் நடிக்க வேண்டிய ஒரு படத்தில் ரஜினி நடித்தால் அது சரியாக இருக்காது.
தனக்கு எது சரியாக வருமோ அதில்தான் ஒரு நடிகர் நடிக்க வேண்டும். அதேபோல்தான் இயக்குனர்களுக்கும். இப்போதாவது பரவாயில்லை. நடிகர்கள் எல்லா இயக்குனர்களின் படங்களிலும் நடிக்கிறார்கள். ஆனால், 60,70களில் அப்படி இல்லை. சிவாஜியை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் எம்.ஜி.ஆர் பக்கம் போக மாட்டார்கள்.
இதையும் படிங்க: அசிங்கமாக கேலி செய்த சொந்த ஊர்க்காரர்கள்!.. எம்.ஜி.ஆர் வளர்ந்த பின் நடந்தது இதுதான்!..
அதேபோல், எம்.ஜி.ஆரை வைத்து தொடர்ந்து படமெடுக்கும் இயக்குனர்கள் சிவாஜி பக்கம் செல்ல மாட்டார்கள். அதற்கு காரணம் இருவரின் ஸ்டைலும் வெவ்வேறு. எம்.ஜி.ஆர் ஆக்ஷன் கதைகளில் நடிப்பவர். சிவாஜியோ உருகி உருகி நடிக்கும் செண்டிமெண்ட் கதைகளில் நடிப்பவர். இருவரின் பாணியும் வெவ்வேறு.

60,70களில் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருந்தவர் ஸ்ரீதர். பல ஹிட் படங்களை இயக்கியவர். சிவாஜியை வைத்து வைர நெஞ்சம் என்கிற படத்தை தயாரித்து இயக்கினார். ஆனால், படப்பிடிப்பு சரியாக நடக்கவில்லை. சிவாஜியின் கால்ஷீட் பெறுவது அவருக்கு சிக்கலாக இருந்தது. செலவை சமாளிக்க முடியவில்லை. கடனிலும் சிக்கினார்.
இதையும் படிங்க: ஒரு பாட்டுக்கு நடனமாட ஒரு மாதம் பயிற்சி எடுத்த எம்.ஜி.ஆர்!.. தலைகுணிந்து வணங்கிய நடிகை…
அப்போதுதான் எம்.ஜி.ஆரை வைத்து படமெடுப்பது என முடிவுக்கு வந்தார். எம்.ஜி.ஆரும் அதற்கு சம்மதித்தார். ஆனால், ஸ்ரீதரோ காதல், செண்டிமெண்ட், காமெடி காட்சிகளை வைத்து படமெடுப்பார். எம்.ஜி.ஆரோ ஆக்ஷன் ஹீரோ. இருவரும் இணைந்தால் படம் தேறாது என திரையுலகில் பலரும் பேசினார்கள். இது ஸ்ரீதரின் காதுக்கும் போனது.
ஆனால், அவர் மனம் மாறவில்லை. நம்மை எம்.ஜி.ஆரால் மட்டுமே காப்பாற்ற முடியும் என நம்பினார். அப்படி உருவான திரைப்படம்தான் உரிமைக்குரல். படம் வெளியான பின் ஸ்ரீதர் என்ன நினைத்தாரோ அதுதான் நடந்தது. அந்த படம் அவருக்கு லாபத்தை பெற்றுக்கொடுத்து அவரின் எல்லா நிதி பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தது.
