இவன் என்ன பைத்தியமா?. இப்படிதான் நடிக்கணுமா?!.. ரஜினியை கலாய்த்த சீனியர் இயக்குனர்!..

Rajinikanth: சினிமா உலகில் ஒரு நடிகரையோ, இயக்குனரையோ அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதையாவது சொல்லி அவர்களை புறக்கணிக்கவே பார்ப்பார்கள். அதற்கு காரணம் புதிதாக வருபவர்கள் மீதும், அவர்களின் திறமை மீது எல்லோருக்கும் நம்பிக்கை இருக்காது. சிலர் மட்டுமே திறமைகளை சரியாக கணிப்பார்கள்.
சென்னை திரைப்பட கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இயக்குனர் பாலச்சந்தர் சென்றபோது அங்கு ரஜினி நடிப்பு பிரிவில் மாணவராக இருந்தார். மாணவர்கள் பாலச்சந்தரிடம் சில கேள்விகளை கேட்க பாலச்சந்தரும் பதில் சொன்னார். அப்போது ரஜினியும் அவரிம் கேள்விகளை கேட்டார். ரஜினியை அருகில் பார்த்ததும் பாலச்சந்தருக்கு எங்கோ பொறி தட்டியது.
அடுத்த நாள் அவரை தனது அலுவலகத்திற்கு அழைத்த பாலச்சந்தர் அவருக்கு அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து பல படங்களிலும் வில்லனாக மட்டுமே நடித்தார் ரஜினி. எந்த நடிகரையும் பின்பற்றாமல் நடிப்பில் தனக்கென ஒரு ஸ்டைலை பின்பற்றினார். சிலர் அதை விமர்சித்தாலும் ரஜினி அதை மாற்றிக்கொள்ளவில்லை. ஒருகட்டத்தில் ரசிகர்களே அதை ரசிக்க துவங்கி அது ரஜினி ஸ்டைலாக மாறிப்போனது.

#image_title
60களில் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருந்தவர் ஸ்ரீதர். திரைப்படங்களில் பல புதுமைகளை கொண்டு வந்தவர். இவர் இயக்கத்தில் இளமை ஊஞ்சலாடுகிறது மற்றும் துடிக்கும் கரங்கள் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் நடித்தபோது ஸ்ரீதருக்கு ரஜினியை பிடிக்கவே இல்லையாம்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய பார்த்திபன் ‘அந்த படத்தில ரஜினி சார் பண்றது எதுவுமே ஸ்ரீதர் சாருக்கு பிடிக்காது. என்னையா இவன் பைத்தியக்காரன் மாதிரி பண்ணிட்டு இருக்கான்னு சொல்லுவாரு. ரஜினி சார் படிக்கெட்டில் ஸ்டைலாக ஏறி, இறங்கி வசனம் பேசுவார். ஸ்ரீதரோ ‘ஒன்னு அவன மேல நின்னு பேச சொல்லு. இல்ல கீழ இறங்கி பேச சொல்லு. எதுக்குயா மேல கீழே ஏறி இறங்கிட்டு இருக்கான்’ என கலாய்ப்பாரு’ என சொல்லியிருக்கிறார்.
ஆனால், ஒரு கட்டத்தில் ரஜினியை ரசிக்க துவங்கிய ஸ்ரீதர் ரஜினிக்குள் இருக்கும் திறமையை புரிந்துகொண்டார். தன்னுடைய உதவியாளர்களிடம் ‘இன்னும் 5 வருடங்களில் ரஜினி பெரிய நடிகராக இருப்பார். நான் பெட் கட்டுகிறேன்’ என சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது போலவே ரஜினி பெரிய நடிகராகவும் மாறினார் என்பதுதான் சினிமாவின் வரலாறு.