காதலிக்க நேரமில்லை படத்தை ரீமேக் செய்ய படையெடுத்த இயக்குனர்கள்… ஸ்ரீதர் கேட்ட ஒரே கேள்வி என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர் டி.எஸ்.பாலையா. இவரின் நகைச்சுவை கலந்த உடல் மொழியை ரசிக்காதவர்களே இல்லை என கூறலாம். மேலும் இவரது நகைச்சுவையான குரலையும் நாம் மறந்திருக்க முடியாது.
“திருவிளையாடல்”, “ஊட்டி வரை உறவு”, “தில்லானா மோகனாம்பாள்” போன்ற பல திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் காலத்திற்கு பேசக்கூடியவை.
1964 ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தில் டி.எஸ்.பாலையா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் இவரின் நடிப்பு இப்போதைய தலைமுறையினரும் ரசிக்கும்படி அமைந்திருக்கும். குறிப்பாக நாகேஷ், பேய் கதை கூறும்போது டி.எஸ்.பாலையாவின் ரியாக்சன் பாரவையாளர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவை.
இந்த நிலையில் இயக்குனர் ஸ்ரீதரிடம் பல இயக்குனர்கள், “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தை மீண்டும் தமிழில் ரீமேக் செய்யப்போகிறோம் என அவரது வீட்டிற்கு படை எடுத்தார்களாம். அப்போது அவர்களிடம் “இத்திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரம் டி.எஸ்.பாலையா. அந்த ரோலுக்கு இணையான ஒரு நடிகர் இப்போது யார் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நடிகர் இருந்தால் வந்து சொல்லுங்கள், அதன் பிறகு நான் இத்திரைப்படத்தை ரீமேக் செய்வதற்கான உரிமத்தை தருகிறேன்” என கூறி பலரையும் அனுப்பிவிட்டாராம். அந்த அளவுக்கு டி.எஸ்.பாலையா தமிழ் சினிமாவில் நிகரில்லா கலைஞராக திகழ்ந்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.