விஜய் விஷயத்துல ஏமாந்து போயிட்டேன்!.. பல வருடங்கள் கழித்து சொன்ன சுந்தர் சி…

Published on: April 2, 2024
sunfe
---Advertisement---

தமிழ் சினிமாவில் இன்றைய இயக்குனர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் சுந்தர்.சி. ரஜினியை வைத்து “அருணாச்சலம்” என்கின்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த இவர். தற்பொழுது ‘ஹாரர்’ படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

“உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் தனது இயக்குனர் திறமையை தெளிவாக தெரியப்படுத்தியவர் சுந்தர்.சி. நகைச்சுவை படமாக வெளிவந்து தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியது. கார்த்திக்கின் திரை வாழ்வில் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படகமாகவும் அமைந்தது. தொடர்ந்து அதே பாணியில் கார்த்திக்கை வைத்து சில படங்களை எடுக்க அவையும் வெற்றி அடைந்தது.

இவர் படங்கள் என்றால் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு பார்க்க செல்வார்கள் ரசிகர்கள். அப்படி கவரத்தக்க விஷயங்கள் இவரது படத்தில் நிசசயமாக இடம் பெற்றிருக்கும். நகைச்சுவை காட்சிகளுக்கு இவர் வழங்கிய அதிக முக்கியத்துவமும், திரைக்கதையை கொண்டு செல்லும் நேர்த்தியும் இவருக்கு பெரும் பெயரை பெற்று தந்தது.

si
si

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய “அருணாச்சலம்” படம் இருவரின் வாழ்வில் மறக்க முடியாத மிகப்பெரிய ஒரு சூப்பர், டூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தில் ரஜினி பேசிய வசனங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. வழக்கம் போல அவரது ஸ்டைலும் தான் “ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான் ” இந்த வசனத்தை இவர்கள் இருவரின் ரசிகர்களும் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்.

கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய தரமான படம் தான் “அன்பே சிவம்” நடிப்பில் சக்கரவர்த்தியான கமலுடன் இவரது இயக்கம், இரண்டும் இணைந்து ரசிகர்களை கவர்ந்திழுத்தது. வித்தியாசமான முகத்தோற்றத்துடன் நடித்த கமலுடன் மாதவனும் இணைந்து நடித்திருந்தனர். நாசரின் வில்லத்தனம் இந்த படத்தை வேறு லெவலிற்கும் கொண்டு சென்றது.

இப்படி முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கிய சுந்தர்ர்.சி. அஜித்தின் இளமை பருவத்தில் அவரை மிக அழகாக காண்பித்த படம் உன்னைத்தேடி, குடும்ப பாங்கான கதை அம்சத்தை கொண்டிருந்த இந்த படம் வெற்றி படமாகவே அமைந்தது.

தற்பொழுது அரண்மனை 4  படத்தை இயக்கி முடித்திருக்கிறார். மூன்று பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில் நான்காம் பாகம் வெளிவர காத்திருக்கிறது. முதலில் விஜய்சேதுபதி இப்படத்தில் இணைவதாக இருந்த நிலையில் கால்ஷீட் ஒதுக்குவதில் பிரச்சனை இருந்தததால் நடிக்க முடியாமல் போனது. சுந்தர்.சி. இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தை ஏற்றிருக்கிறார்.

விஜய் அரசியலில் ஆர்வம் காட்டி, கட்சியையும் துவக்கி உள்ள நிலையில் அவரின் கடைசி படம் எதுவாக இருக்கும் என்ற குழப்பம் ரசிகர்களிடம் இருந்து வருகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் சுந்தர்.சி, தான் விஜய்யுடன் இணைய முடியாமல் போனது தனக்கு வருத்தமே என்று தெரிவித்திருந்தார்.

Sankar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.