மீண்டும் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் நடிகர்களுடன் களமிறங்கும் சுந்தர்.சி.! இதுக்கு ஒரு எண்டே இல்லையா..?

by Manikandan |   ( Updated:2022-01-12 08:17:32  )
மீண்டும் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் நடிகர்களுடன் களமிறங்கும் சுந்தர்.சி.! இதுக்கு ஒரு எண்டே இல்லையா..?
X

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் சுந்தர் சி அவர்கள் தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக இவர் இயக்கிய மேஜிக் கலகலப்பு 2 திரைப்படம் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தில் நடிகர், ஜெய், ஜீவா, சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரீன் தெரசா, யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்து இருந்தனர். இந்த மேஜிக் கலகலப்பு 2 திரைப்படம் மேஜிக் கலகலப்பு எனும் திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டிருந்தது.

கலகலப்பு 2 - விமர்சனம் (3/5 ) ஆடம்பர சிரிப்பு வெடி - Tamilveedhi

இந்தப் படத்தை அடுத்து இயக்குனர் சுந்தர்.சி இரண்டு மூன்று கதாநாயகர்களை வைத்து தொடர்ச்சியாக படம் எடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் உள்ளிட்ட மூவரையும் வைத்து புதிய படம் ஒன்றை இயக்குனர் சுந்தர் சி உருவாக்க உள்ளார். இந்த படம் வழக்கம் போல காமெடி கலந்த திரைப்படமாக அமையும் என கூறப்படுகிறது

இந்த படம் ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற கபூர் அண்ட் சன்ஸ் எனும் படத்தின் அதிகாரபூர்வமாற்ற ரீமேக் என கூறப்படுகிறது. படத்திற்கான ஷூட்டிங் ஜனவரி இறுதியில் ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

Next Story