வேற சட்டை கொடுங்க- அடம்பிடித்த மன்சூர் அலிகான்... ரைமிங்காக பதில் சொல்லி கலாய்த்து தள்ளிய இயக்குனர்…
தமிழ் சினிமாவின் கலகலப்பான வில்லன் நடிகராக புகழ்பெற்ற மன்சூர் அலிகான் தற்போது விஜய்யின் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு மிகவும் விருப்பமான நடிகராக திகழ்ந்து வருபவர் மன்சூர் அலிகான். ஆதலால் அவர் “லியோ” திரைப்படத்தில் நிச்சயம் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி “லியோ” திரைப்படத்தில் மன்சூர் அலிகான் தற்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகானை ஒரு பிரபல இயக்குனர் கலாய்த்து தள்ளியது குறித்து ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அது என்ன சம்பவம்? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
1995 ஆம் ஆண்டு ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “சீதனம்”. இத்திரைப்படத்தில் பிரபு, சங்கீதா, ரஞ்சிதா ஆகியோர் முன்னணி கதாநாயகர்களாக நடித்திருந்தனர். இதில் மன்சூர் அலிகான் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் மன்சூர் அலிகான் நடிக்க வந்த முதல் நாளில், அவர் ஒரு காட்சியில் அணிந்து நடிப்பதற்காக ஒரு சட்டை வழங்கப்பட்டது. அந்த சட்டையை அணிந்து பார்த்தார் மன்சூர் அலிகான். ஆனால் அந்த சட்டை அவருக்கு இறுக்கமாக இருந்ததாம். ஆதலால் ஆடை வடிவமைப்பாளரை அழைத்த மன்சூர் அலிகான், “எனக்கு இந்த சட்டை பிடிக்கலை. வேற சட்டை கொடுக்க முடியுமான்னு டைரக்டர்கிட்ட கேட்டு சொல்லுங்க” என கூறினாராம்.
அந்த ஆடை வடிவமைப்பாளர் உடனே இயக்குனர் சுந்தர்ராஜனிடம் சென்று “மன்சூர் அலிகான் சார் அந்த சட்டை பிடிக்கலைன்னு சொல்றாரு” என கூறியிருக்கிறார். உடனே மன்சூர் அலிகானிடம் சென்ற இயக்குனர் சுந்தர்ராஜன், “என்ன பிரச்சனை?” என்று கேட்க, அதற்கு மன்சூர் அலிகான், “இந்த சட்டை எனக்கு பிடிக்கலை, மாத்திக்கொடுங்க” என்று கூற, அதற்கு சுந்தர்ராஜன், “எனக்கு உன்னைய கூடத்தான் பிடிக்கலை, நான் உன்னைய வச்சி படம் எடுக்கலையா? சினிமாவுல எல்லாத்தையும் அட்ஜெஸ்ட் பண்ணிட்டுத்தான்யா போகனும். நாம நினைக்குறது எல்லாம் கிடைக்காது. கிடைக்குறது வச்சித்தான் சினிமா எடுக்கனும்” என கூறியிருக்கிறார். இதனை கேட்டு அரண்டுப்போனாராம் மன்சூர் அலிகான். அதன் பின் அந்த சட்டையையே அணிந்துகொண்டு நடித்தாராம் மன்சூர் அலிகான்.
இதையும் படிங்க: பாரதிராஜாவால் ரிஜக்ட் செய்யப்பட்டு பெரிய ஆளான நட்சத்திரங்கள்!.. யார் யார்னு தெரியுமா?