More
Categories: Cinema History Cinema News latest news

உனக்குலாம் அது செட் ஆகாது!.. ஆசையா கேட்ட மோகனுக்கு பல்பு கொடுத்த இயக்குனர் சுந்தர்ராஜன்!…

Mohan: தமிழ் சினிமாவில் குறைந்த அளவிலான திரைப்படங்களையே கொடுத்திருந்தாலும் வெற்றிப்படங்களாய் கொடுத்தவர் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கொடுத்தவர்.

இவர் பயணங்கள் முடிவதில்லை எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். சினிமா மீது கொண்ட மோகத்தினால் சென்னைக்கு வந்து பின் நாடகங்கள் பலவற்றையும் நடத்தி வந்துள்ளார். அதன்பின் நாடகங்கள் மூலம் தனது கதையை மக்களுக்கு கொண்டு செல்வதை விட வெள்ளித்திரையில் மூலம் கொண்டு சென்றால் இன்னும் பல பேருக்கு கொண்டு செல்லலாம் என முடிவெடுத்து இயக்குனராக ஆகியுள்ளார்.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:சிகரெட்டுக்கு வந்த தடை!.. கறார் காட்டிய தயாரிப்பாளர்!.. நாகேஷ் செஞ்சதுதான் ஹைலைட்!…

இவர் மேலும் கட்டளை, சூரியவம்சம், பாட்டாளி போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனது நடிப்பினையும் சிறப்பாக வெளிக்காட்டினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் வெள்ளிவிழாவையே கண்டன. அதற்காக இவருக்கு சிறப்பு கெளரவமும் அந்த காலத்தில் செய்யப்பட்டது.

மேலும் இவர் சினிமாவில் பல்வேறு குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். காமெடி, வில்லன் என பல கதாபாத்திரத்தில் நடித்து இவரை ரசிப்பதற்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

இதையும் வாசிங்க:இப்பயாச்சும் நம்புங்கடா! 2 கோடி கொடுத்த அஜித் – வைரலாகும் புகைப்படம்! வேற வழி தெரியல ஆத்தா

இவர் இயக்கிய திரைப்படங்களில் ஒன்றுதான் மெல்ல திறந்தது கதவு. இப்படத்தில் நடிகர் மோகன் மற்றும் அவருக்கு ஜோடியாக நடிகை ராதா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் அமலா, செந்தில் என பல கதாபாத்திரங்களும் நடித்திருந்தனர். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியையும் தேடி தந்தது. இப்படத்தில் நடிக்கும் போது மோகன் இவரிடம் தனக்கென ஒரே ஒரு சண்டை காட்சி வைக்க சொன்னாராம்.

உடனே சுந்தர ராஜன் ‘இந்த படம் முடியும் போது நீயும் நானுமே சண்டை போடுவோமா என தெரியவில்லை. இதில் நீ சண்டை காட்சி கேட்கிறாயா?’ என கூறி அவர் ஆசையை நிராகரித்துவிட்டாராம். மேலும் சண்டை காட்சி என்றால் அதில் நடிப்பவரின் கண்களில் ஒரு உணர்ச்சி இருக்க வேண்டும், ஆனால் மோகனின் கண்களில் அதை எதிர்பார்க்க முடியாது என அதனை நிராகரித்ததாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:நடிகர் திலகத்தையே டென்ஷனாக்கிய வைகைப்புயல்… படப்பிடிப்பில் நடந்தது இதுதான்!..

Published by
amutha raja

Recent Posts