Connect with us

Cinema History

அம்மா அப்பா எனக்கு பண்ணாததை கூட அவங்க செஞ்சிருக்காங்க… செண்டிமெண்டாக பேசிய தனுஷ் பட இயக்குனர்!..

தமிழ் சினிமாவில் முன்பை விட இப்போது இயக்குனராவதும் கதாநாயகனாவதும் எளிமையான விஷயமாக ஆகிவிட்டது. சமூக வலைதளங்கள் இணையதளம் போன்றவற்றின் முன்னேற்றங்களால் புதிதாக வரும் இயக்குனர்கள் நடிகர்கள் கூட மக்கள் மத்தியில் வெகு சீக்கிரமாகவே பிரபலமாகி விடுகின்றனர்

ஆனால் முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒருவர் இயக்குனராவது என்பது கடினமான விஷயமாக இருந்தது. குறைந்தது 10 படங்களுக்கு மேலாவது இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தால் மட்டுமே அவர்களால் இயக்குனராக முடியும் என்கிற நிலை இருந்தது.

இயக்குனர் பாண்டியராஜ், பார்த்திபன் போன்ற பல இயக்குனர்கள் அப்பொழுது பல படங்களில் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்த பிறகுதான் இயக்குனர் ஆனார்கள். அப்படி இயக்குனர் ஆனவர்களில் இயக்குனர் சுராஜ் முக்கியமானவர்.

சுந்தர் சியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இவர். கிட்டத்தட்ட தலைநகரம் திரைப்படம் வரையிலும் சுந்தர் சியிடமே பணிபுரிந்து வந்தார் அதன் பிறகு இயக்குனராக தனியாக திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். சுராஜ் எப்பொழுதுமே நகைச்சுவை திரைப்படங்களை அதிகமாக இயக்குவார். படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற பல படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இயக்குனர் கூறிய விளக்கம்:

ஒரு பேட்டியில் அவர் கூறும்போது ஒரு படத்திற்கான படப்பிடிப்பு துவங்கிய பிறகு எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் அந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்தாமல் எடுத்து விடுவேன். கதாநாயகனே வரவில்லை என்றாலும் கூட படப்பிடிப்பு நடக்கும்.

ஏனெனில் தயாரிப்பாளரின் காசு என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்று அவர் கூறினார். மேலும் கூறும் பொழுது எனது அம்மா அப்பா கூட ஒரு மளிகை கடை வைத்துக் கொள்ள கூட காசு கொடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது நம்மை நம்பி இருபது கோடி வரை கொடுக்கும் ஒரு தயாரிப்பாளருக்கு நாம் நியாயமாக இருப்பது முக்கியம் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அட மாட்டிகிட்டீங்களா!.. சாய்பல்லவியின் காதலன் இவர்தானா?.. வைரலாகும் சீக்ரெட்

google news
Continue Reading

More in Cinema History

To Top