பாகுபலி மாதிரி இருக்கு கங்குவா... உலகத்தரம்யா... இயக்குனர் வைத்த வேண்டுகோள் செமயா இருக்கே!

by sankaran v |   ( Updated:2024-11-19 04:02:27  )
kanguva new
X

#image_title

ஞானவேல் ராஜா தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான கங்குவா படத்தை ரசிகர்கள், சமூக வலைதளங்கள் என அனைத்துத் தரப்பினரும் கழுவி கழுவி ஊற்றினாங்க. படமும் எதிர்பார்த்த வரவேற்பையும் பெறவில்லை. வசூலையும் ஈட்டவில்லை. பெருத்த நஷ்டத்தை உண்டாக்கி விட்டது. இந்தப் படத்தை தியேட்டருக்குச் சென்று ஒரே ஒரு நபர் மட்டும் பார்த்த வீடியோ ஒன்று வைரலானது.

நெகடிவ் விமர்சனம்

Also read: BiggBoss tamil: புதுசா பண்ணுற நினைப்போ?… அரைச்ச மாவை கிண்டும் விஷால், தர்ஷிகாவால் கடுப்பாகும் ரசிகர்கள்

இப்படி எல்லாம் படத்தை எடுத்து ஏன் மக்களை கஷ்டப்படுத்துறீங்க? உங்க உழைப்பு கடினமாக இருந்தாலும் வேஸ்ட் ஆகி விட்டதே என பலரும் ஆளாளுக்கு கங்குவா படத்தை விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். நெகடிவ் விமர்சனங்களே அதிகம் வந்த வண்ணம் உள்ளன. ப்ளூசட்டமாறன் ஒரு படி மேல போய் கங்குவா 'படத்தோட பார்ட் 2 வை மட்டும் எடுத்துறாதீங்க.

ஒரே இரைச்சல்

kanguva suseemdhran

kanguva suseemdhran

எடுக்காம இருந்தாலே நீங்க செய்ற பெரிய உதவி அதுதான்' என்று தெரிவித்து இருந்தார். ஆனால் அதன் 2ம் பாகமும் தயாராகும் என தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்பட்டது. படத்தில் ஒரே இரைச்சலாக உள்ளது என்று இளம் வயதினரும் சொல்கிறார்கள். இவர்களின் வேண்டுகோளை ஏற்று 2 புள்ளிகள் சவுண்டில் குறைத்து விட்டதாக ஞானவேல் ராஜாவும் தெரிவித்து இருந்தார்.

ரசிகர்கள் கமெண்ட்

அதற்கும் கவுண்டர் கொடுத்து ரசிகர்கள் கமெண்ட் அடித்தார்கள். 'கண்ணாடியைத் திருப்புனா ஆட்டோ ஓடுமா' என்றார்கள். இப்படியாக கங்குவா படம் படிப்படியாக பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இயக்குனர் சுசீந்திரன் கங்குவா படம் குறித்து ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கங்குவா = பாகுபலி

Also read: சூர்யாவின் பாலிவுட் கனவை காலி செய்த கங்குவா!.. என்ன ஆச்சுனு இம்புட்டு பண்ணுறீங்க?

பாகுபலிக்கு இணையா கங்குவா படம் இருக்கு. தெலுங்கு சினிமாவுக்கு பாகுபலி மாதிரி தான் இந்த கங்குவா படம். சூர்யாவின் நடிப்பு, உழைப்பு பிரமிக்க வைக்கிறது. உலகத்தரம் வாய்ந்த படத்தைக் காலம் தாழ்த்தி கொண்டாடி விடாதீர்கள். கங்குவா உங்களை மகிழ்விப்பான் என ரசிகர்களுக்கு இயக்குனர் சுசீந்திரன் வேண்டுகோள் வைத்துள்ளார். நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, வெண்ணிலா கபடி குழு படங்களை இயக்கியவர் சுசீந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story