ரஞ்சித்… மாரி.. இதோ நான் வரேன்டா!.. எங்க சாதிய நான் காட்டுறேன்!. இயக்குனர் சவால்!…

தமிழ் சினிமாவில் சாதிய பெருமை பேசும் படங்கள் நிறைய வெளிவந்திருக்கிறது. சாதியை பெருமை பேசும்படி சின்னக்கவுண்டர், தேவர் மகன் போன்ற படங்களே வெளிவந்திருக்கிறது. அந்த படங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் மீது அந்த சாதி சாயம் பூசப்படிருக்கும்படி எல்லா காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அப்போது இதற்கெல்லாம் எதிர்ப்பு வந்தது இல்லை.
இப்போது நிறைய சாதி அமைப்புகள் வந்துவிட்டது. அதோடு, சமூகவலைத்தளங்கள் வந்துவிட்டது. அதில், சாதி பற்றி பலரும் பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள். எனவே, சாதி பற்றிய படங்களை இயக்குனர்கள் எடுப்பது இல்லைல். ஆனால், தங்களின் சாதியில் மக்கள் சந்தித்த மற்றும் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி மாரி செல்வராஜ், ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் தங்களின் படங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

அதிலும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சந்தித்த பிரச்சனைகளை மாரி செல்வராஜ் தொடர்ந்து தனது படங்களில் பேசி வருகிறார். அவர் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற எல்லா படங்களிலும் இதுவே கதைக்களமாக இருந்தது.
என் மக்கள் சந்தித்த பிரச்சனைகளை நான் தொடர்ந்து பேசுவேன் எனவும் அவர் சொல்லி வருகிறார். அதேபோல், ரஞ்சித் தனது படங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியலை பேசி வருகிறார். அதேபோல், வெற்றிமாறன் மீதும் இந்த இமேஜ் இருக்கிறது. இதற்கு சாதிய ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சாதியை வைத்து இவர்கள் இரண்டு பேரும் கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார்கள்.
அப்படி சம்பாதிக்கும் பணத்தில் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன உதவி செய்தார்கள் என அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில்தான் திமிரு, காளை உள்ளிட்ட சில படங்களை இயக்கிய தருண் கோபி ஊடகம் ஒன்றில் பேசியபோது ரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார்.

‘நீ ஜாதி பத்தி பேசு. உன்னோட ஜாதி பெருமையை பேசு. ஆனா இன்னொரு ஜாதிய தப்பா காட்டாத.. ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் 3 பேருக்கும் சொல்றேன். இதோ நான் வரேன்டா, படம் டைரக்ட் பண்ண வரேன்டா,, எங்க வாழ்வியல காமிக்கிறேன் பாக்குறியாடா?’ என பொங்கியிருக்கிறார்.