படப்பிடிப்புக்கு வரமுடியாமல் போன ஸ்ரீபிரியா! பதிலுக்கு இயக்குனர் கொடுத்த பரிசு

by Rohini |   ( Updated:2024-08-24 20:42:05  )
sripriya
X

sripriya

Sripriya: 80ளில் தமிழ் சினிமாவின் ஒரு முன்னணி நடிகையாக கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. ரஜினி கமல் இவர்களின் ஆஸ்தான நடிகை என்று சொல்லலாம். ரஜினிக்கு சினிமாவில் ஸ்ரீப்ரியா சீனியர். மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடியவர் .70, 80களில் பிரபல இயக்குனர்களாக இருந்த கே.பாலச்சந்தர் டி.என்.பாலு போன்றவர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகை.

ஏன் கலைஞர் கருணாநிதிக்கு கூட பிடித்தமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீபிரியா. எந்த கிசுகிசுக்களிலும் சிக்காதவர். இந்த நிலையில் இவரைப் பற்றிய ஒரு சுவாரசிய சம்பவத்தை பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார். அஞ்சல் பெட்டி 520 மற்றும் சட்டம் என் கையில் போன்ற படங்களை எடுத்தவர் டி.என்.பாலு.

இதையும் படிங்க: ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் வின்னர் ஆனதுக்கு பின்னணியில் உள்ள காரணம்..

இவர் அடுத்ததாக ஸ்ரீபிரியாவை வைத்து ஒரு படத்தை எடுக்க நினைத்திருக்கிறார். ஸ்ரீபிரியாவும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் சொன்ன கால்ஷீட் தேதியில் ஸ்ரீபிரியாவால் வர முடியவில்லை. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற பாலு ஸ்ரீபிரியா மீது வழக்கு தொடர்ந்து வக்கீல் நோட்டீஸ் வரை அனுப்பி விட்டாராம்.

இது அப்போதைய காலகட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தியாக இருந்தாலும் சட்டம் என் கையில் படத்தின் 100-வது நாள் விழாவில் ஸ்ரீபிரியா கலந்து கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. யாராக இருந்தாலும் தன் மீது வழக்கு தொடர்ந்த ஒருவரின் விழாவுக்கு வருவதை யோசிப்பார்கள். ஆனால் ஸ்ரீபிரியா அதை எதையும் மனதில் வைக்காமல் அந்த படத்தின் நூறாவது விழாவில் கலந்து கொண்டதோடு பாலுவையும் சந்தித்து தனது வாழ்த்தை சொல்லிவிட்டு அருகில் போய் அமர்ந்தாராம்.

இதையும் படிங்க: கோட் படத்தில் குட்டி விஜய் இந்த பிரபலத்தின் மகனா? விஜய் என்ன கேட்டார் தெரியுமா?

இதை பார்த்ததும் பாலுவிற்கு கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாம். உடனே தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் செய்து இந்த பிரச்சினையை பேசி சுமூகமாக முடித்தார்களாம். இதிலிருந்து எந்த ஒரு பிரச்சனையையும் சரியான முறையில் அணுகினால் அந்தப் பிரச்சனைக்கு உடனடியாக சுமூகமாக தீர்வு முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் என சித்ரா லட்சுமணன் கூறினார்.

Next Story