டார்ச்சர் பண்ணிய இயக்குனர்...! துணைக்கு மனைவியை அழைத்த வாரிசு நடிகர்..
அசுரன், விசாரனை போன்ற படத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் நடிகர் தமிழ். உண்மையில் போலீஸ் அதிகாரியான தமிழ் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் தன் பணியை உதறி தள்ளி சினிமாவிற்குள் நுழைந்தார்.
இவர் ஜெய்பீம் படத்தில் முரட்டுத் தனமான போலீஸாக நடித்திருப்பார். மேலும் சில படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரான் படத்தை தயாரித்துள்ளார்.
இதையும் படிங்களேன்: நீ எத வேணுனாலும் குடி பேபி..! எங்க ஆல் டைம் ஃபேபரைட் நீதான்..ரசிகர்களின் மழையில் ஓவியா..
இப்படத்திற்காக இவர் படத்தில் நடித்தோரை அளவுக்கதிமாக டார்ச்சர் செய்துள்ளேன் என பட விழாவில் சொல்லியுள்ளார். ஏனென்றால் படம் முடியும் தருவாயில் 10 நாட்களாக விக்ரம் பிரபு உள்பட யாரும் இவருடன் பேசவில்லையாம்.
மேலும் விகரம் பிரபுவும் அவரின் மனைவியிடம் யாராவது வீட்டிலிருந்து என்னை பார்த்து வீட்டு போங்கள் என்றெல்லாம் கூறினாராம். அப்பொழுது தான் இயக்குனருக்கு புரிந்ததாம் எவ்ளோ டார்ச்சர் பண்ணியிருக்கோம் என்று. ஆனால் அதன் விளைவுதான் படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என மன நெகிழ்வுடன் கூறினார்.