கண்ணதாசனின் ஹிட் பாடலை வேண்டாமென சொன்ன இயக்குனர்!.. அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்!..
Kannadasan: நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல முகங்களை கொண்டவர் கவிஞர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிகராக வளரும்போது கண்ணதாசன் கதாசிரியராக வளர்ந்தார். எம்.ஜி.ஆரின் ஆரம்பகால திரைப்படங்களில் பல பாடல்களை அவருக்கு எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகவும் காரணமாகவும் கண்ணதாசன் இருந்திருக்கிறார்.
அதனால், கண்ணதாசன் மீது எப்போதும் அன்பும், மரியாதையையும் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல சிவாஜி உட்பல பல நடிகர்களின் படங்களுக்கு பாடல்களை கண்ணதாசன் எழுதியிருக்கிறார். சிவாஜி கணேசனுக்கு பல தத்துவ, சோக மற்றும் காதல் பாடல்களை எழுதியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரு பாட்டுக்கு 20 நாட்கள் அலையவிட்ட கண்ணதாசன்… கடுப்பான பி.எஸ்.வீரப்பா.. கடைசியில் செம ட்விஸ்ட்டு..!
50,60களில் செல்வாக்கு மிக்க கவிஞராக வலம் வந்தார். கண்ணதாசன் எழுதியது போல் சோகம் மற்றும் தத்துவங்களை யாரும் எழுதவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மரணத்திற்கு கூட பல அர்த்தமுள்ள பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய ‘சட்டி சுட்டதடா மற்றும் வீடு வரை உறவு’ போன்ற பாடல்கள் இப்போதும் மரணம் நேர்ந்த வீடுகளில் பாடிக்கொண்டிருக்கிறது.
சில சமயம் கண்ணதாசன் எழுதிய சில பாடல் வரிகள் இயக்குனருக்கு பிடிக்காமலும் போயுள்ளது. ஆனால், அதே பாடல் வேறு படத்தில் இடம் பெற்ற சம்பவமும் நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் குலோபகாவலி, காத்தவராயன், பாசம், பெரிய இடத்து பெண், பணக்கார குடும்பம், என்னைப்போல் ஒருவன், குப்பத்து ராஜா என பல படங்களை இயக்கியவர் டி.ஆர்.ராமன்னா.
இதையும் படிங்க: ஆசையாக துவங்கிய படம்!. எம்.ஜி.ஆர் மீது வந்த கோபம்!.. கண்ணதாசன் செஞ்ச வேலைய பாருங்க…
இவரின் தயாரிப்பில் உருவான மணப்பந்தல் படத்திற்கு கண்ணதாசன் எழுதிய பாடல்தான் ‘வாராயோ தோழி வாராயோ.. மணப்பந்தல் காண வாராயோ’. பாடல். பாடல் எழுதப்பட்டு இசை எல்லாம் அமைக்கப்பட்டு ஒலிப்பதிவுக்கும் தயாராகிவிட்டது. ஆனால், ராமன்னாவுக்கு இந்த பாடல் பிடிக்கவில்லை. எனவே, கடைசி நேரத்தில் இந்த பாடலை வேண்டாம் என சொல்லிவிட்டார்.
அதன்பின் அந்த பாடல் சிவாஜி - சாவித்ரி நடித்த பாசமலர் படத்தில் இடம் பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. இப்படி அவரின் பாடல் ஒரு படத்திற்கு எழுதப்பட்டு வேறு படத்தில் இடம் பெற்ற கதை பலமுறை நடந்துள்ளது.
இதையும் படிங்க: பாடல் வரிகளை பார்த்து அசந்துபோன கண்ணதாசன்!.. அப்பவே கெத்து காட்டிய டி.ராஜேந்தர்…