மாஸ்டர் படத்திற்கு பின் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் 4ம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் துவங்கியுள்ளது.
இந்த படத்திற்கு பின் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் பிரம்மாண்டமான திரைப்படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் உருவாகவுள்ளது. இப்படத்தை ‘தோழா’ படத்தின் இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இந்த தகவல் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் வம்சி ‘நாங்கள் அறிவிப்பை வெளியிட்டு விட்டோம். இந்த படம் எல்லாரையும் கவரும்படி இருக்கும் என்பதை மட்டுமே என்னால் இப்போது கூற முடியும்.
விஜய் ஒவ்வொரு படத்திலும் தனித்துவமாக இருக்கிறார். தமிழ் படத்தில் அவரை இயக்குவது எனக்கும் புதிய அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன். இந்த படம் பற்றிய மற்ற விபரங்களை விரைவில் அறிவிப்போம்’ என அவர் கூறினார்.
இந்த படத்தில் முன்னணி நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பணியாற்ற வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.